RCB Captain 2025: கப்பு வருமா? ஆர்சிபியின் புதிய கேப்டன் இவர் தான்!
RCB Captain 2025 : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய கேப்டானாக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய கேப்டன் யார் என்கிற அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு :
ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகள் கோப்பைகளை அதிக முறை வென்று பிரபலமாக இருந்தாலும் கோப்பையை வெல்லாமல் ரசிகர்களின் படைபலத்தோடு பிரபலமான அணியாக இருப்பது ஆர்சிபி அணி தான்.
Just In




புதிய கேப்டன் யார்?
கடந்த மூன்று சீசன்களாக ஆர்சிபி அணியின் கேப்டனாக ஃபாப் டூ பிளிஸ்சிஸ் இருந்தார், அவரடி கேப்டன்சியில் பெங்களூரு அணி 2022, 2023, 2024 ஆகிய சீசன்களில் தொடர்ந்து மூன்று முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற்றது. அதுவும் கடந்த 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் கடைசி 7 போட்டிகளில் வெற்றி பெற்றால் தான் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்கிற நிலையில் கடைசி 7 போட்டிகளில் வென்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற்றது.
அதனால் இந்த சீசனில் டூ பிளிஸ்சிஸ் மீண்டும் பெங்களூரு அணியின் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அவரை ஐபிஎல் மெகா ஏலத்தில் அணி நிர்வாகம் ஏலத்தில் எடுக்கவில்லை. டூ பிளிஸ்சிஸிற்கு 40 வயது ஆகுவதால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இளம் கேப்டனை நியமிக்க ஆர்சிபி நிர்வாகம் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் ஆர்சிபி அணியின் புதிய கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கபட்டுள்ளார்.
ஆர்சிபி அணியை வழிநடத்தும் எட்டாவது வீரர் மற்றும் நான்காவது இந்தியர் என்ற பெருமையை பட்டிதர் பெற்றார். அவருக்கு முன்பு, ராகுல் டிராவிட், டேனியல் வெட்டோரி, ஷேன் வாட்சன், விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ், ஷேன் வாட்சன் மற்றும் அனில் கும்ப்ளே போன்ற ஏழு வீரர்கள் ஆர்சிபி அணிக்கு தலைமை தாங்கியுள்ளனர்.
ரஜத் படிதார்:
2021 பெங்களூரு அணியில் ஏலத்தில் எடுக்கப்பட்ட ரஜத் படிதார் தனது முதல் சீசனில் எதையும் சிறப்பாக செய்யமுடியவில்லை. அதன் பின்னர் 2022 ஆன் ஆண்டு நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் அவரை யாரும் எடுக்கமுன் வரவில்லை. ஆனால் அந்த சீசனில் ஆர்சிபி அணிக்கு மாற்று வீரராக மீண்டும் வந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2023 ஆம் ஆண்டு சீசனில் காயம் காரணமாக அவரால் விளையாட முடியாமல் போனது, அதன் பின்னர் கடந்த சீசனில் ஆர்சிபி அணி பிளே ஆஃப் செல்ல படிதாரும் ஒரு மிக முக்கிய காரணமாக இருந்தார்.
31 வயதான படிதார், சையத் முஷ்டாக் அலி டிராபி மற்றும் விஜய் ஹசாரே டிராபி 2024-25 சீசனில் மத்தியப் பிரதேச அணிக்கு கேப்டனாக் செயல்பட்டார். அவர் மத்தியப் பிரதேசத்தை SMAT இன் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார், ஆனால் அவர் இறுதிப்போட்டியில் மும்பைக்கு எதிராக தோல்வியுற்றார்.
பெங்களூரு அணி: ரஜத் படிதார் (கேப்டன்)விராட் கோலி,யாஷ் தயாள், லியாம் லிவிங்ஸ்டோன், பில் சால்ட், ஜிதேஷ் ஷர்மா, ஜோஷ் ஹேசில்வுட், ரசிக் தார், சுயாஷ் சர்மா, க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், நுவான் துஷாரா, ஜவ்து பந்தேக், ஜவ்டு பெட்டேல் சிகாரா, லுங்கி என்கிடி, அபிநந்தன் சிங், மோஹித் ரதீ.