ஐபிஎல் 2025 ஆம் ஆண்டுக்கான சீசன் அடுத்த மாதம் துவங்க உள்ளது, மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடரில் உலகின் அனைத்து முன்னணி கிரிக்கெட் வீரர்களும் கலந்துக்கொள்ளும் இந்த தொடர் சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்தவுடன் தொடங்க உள்ளது. 

பயிற்சி: 

வழக்கமாக ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு அனைத்து அணிகளும் தங்கள் சொந்த மைதானங்களில் பயிற்சி மேற்கொள்வர், அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சி மேற்க்கொள்ளும் போது சென்னை ரசிகர்களுக்கு மைதானத்தில் நடக்கும் பயிற்சியை காண்பதற்க்கே ரசிகர் கூட்டம் வரும். குறிப்பாக எம்.எஸ் தோனியின் பயிற்சியை பார்ப்பதற்கவே ஒரு மைதானத்தின் ஒரு பகுதி நிரம்பும் அளவுக்கு கூட்டம் இருக்கும். 

இதையும் படிங்க: Jasprit Bumrah: ஜஸ்ப்ரித் பும்ரா.. சாம்பியன்ஸ் டிராபியில் களமிறங்குவாரா? மாட்டாரா? பிசிசிஐ இன்று இறுதி முடிவு

பிசிசிஐ போட்ட ஆர்டர்:

இந்த நிலையில் தான் பிசிசிஐ அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது, அதில் ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்பு அணிகள் யாரும் தங்கள் ஹோம் கிரவுண்டை பயிற்சிக்காக பயன்படுத்தக்கூடாது என்று கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மேற்க்கொள்ளும் பயிற்சியை காண முடியாத சூழல் உருவாகியுள்ளது. மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களால் தல என்று அழைக்கப்படும் தோனியின் பயிற்சியை காண முடியாது நிலை ஏற்ப்படும் என்று கூறப்படுகிறது

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல்-க்கு முன்பதாக நாவலூர் அருகேயுள்ள அவர்களின் டிரெயினிங் செண்டரில் பயிற்சி மேற்க்கொள்ளலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது

இதையும் படிங்க: IND Vs ENG 3rd ODI: ஹாட்ரிக் வெற்றியா? ஆறுதல் வெற்றியா? இந்தியா Vs இங்கிலாந்து, 3வது ODI, அகமதாபாத் மைதானம் எப்படி?

IPL 2025 ஏலத்தில் CSK ஆல் வாங்கப்பட்ட வீரர்கள்

1. டெவோன் கான்வே - ரூ. 6.25 கோடி

2. ராகுல் திரிபாதி - ரூ. 3.4 கோடி

3. ரச்சின் ரவீந்திரா - ரூ. 4 கோடி

4.ரவிச்சந்திரன் அஸ்வின் - ரூ. 9.75 கோடி

5. கலீல் அகமது - ரூ. 4.80 கோடி

6. நூர் அகமது - ரூ. 10 கோடி

7. விஜய் சங்கர் - ரூ. 1.2 கோடி

8. சாம் கரன் - ரூ. 2.4 கோடி

9. ஷேக் ரஷீத் - ரூ. 30 லட்சம்

10. அன்ஷுல் கம்போஜ் - ரூ 3.4 கோடி

11. முகேஷ் சவுத்ரி - ரூ 30 லட்சம்

12. தீபக் ஹூடா - ரூ. 1.7 கோடி

13. குர்ஜப்னீத் சிங் - ரூ. 2.2 கோடி

14. நாதன் எல்லிஸ் - ரூ. 2 கோடி

15. ஜேமி ஓவர்டன் - ரூ. 1.5 கோடி

16. கமலேஷ் நாகர்கோடி - ரூ.30 லட்சம்

17. ராமகிருஷ்ண கோஷ் - ரூ 30 லட்சம்

18. ஷ்ரேயாஸ் கோபால் - ரூ 30 லட்சம்

19. வான்ஷ் பேடி - ரூ. 55 லட்சம்

20. ஆண்ட்ரே சித்தார்த் - ரூ 30 லட்சம்

தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்:  ருதுராஜ் கெய்க்வாட், மதீஷா பத்திரனா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா மற்றும் எம்எஸ் தோனி.