2025 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் ஆர்சிபி புதிய கேப்டன் யார் என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ள நிலையில் மூத்த வீரர் விராட் கோலியே அணியை வழிநடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஐபிஎல் மெகா ஏலம்:
2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும்25 தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடந்தது. இந்த ஏலத்தில் மொத்தம் 577 வீரர்களின் பெயர் இடம்பெற்றிருந்தனர். இந்த ஏலத்தில் அதிக விலைக்கு இந்திய வீரர் ரிஷப் 27 கோடிக்கு ஏலம் போனார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
இந்த ஏலத்தில் பெங்களூர் அணி 22 வீரர்களை ஏலத்தில் எடுத்தது. இதில் இங்கிலாந்து வீரர்களான லியாம் லிவிங்ஸ்டன், ஃபில் சால்ட், ஜேகப் பெத்தல் போன்ற அதிரடி வீரர்களையும் பந்து வீச்சாளர்களில் ஜோஷ் ஹேசல்வுட் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களையும் ஆர்சிபி அணி ஏலத்தில் எடுத்தது.
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:
ஆர்சிபி அணியில் ஏலத்திற்கு முன்னதாக விராட் கோலி, ரஜத் படிதார், யஷ் தயால் ஆகியோர் தக்கவைக்கப்பட்டனர். இதில் கடந்த மூன்று ஆண்டுகளாக கேப்டனாக இருந்த ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் , முகமது சிராஜ், கிளேன் மேக்ஸ்வெல் ஆகியோர் அணியில் தக்க வைக்கப்படவில்லை.
இதையும் படிங்க: IPL 2025 RCB: "இந்த முறை மிஸ்ஸே ஆகாது" மகுடம் சூடுவாரா அரசன் கோலி? கோப்பையை கையில் ஏந்துமா RCB?
ஆர்சிபி அணியின் புது கேப்டன் யார்?
ஆர்சிபி அணி ஏலத்தில் 22 வீரர்களை ஏலத்தில் எடுத்தாலும் அதில் கேப்டனாக செயல்படக்கூடிய வீரர்கள் மட்டுமே உள்ளனர். க்ருணால் பாண்டியா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் மட்டுமே ஐபிஎல்லில் இதற்கு முன்னர் கேப்டனாக சில போட்டிகளில் செயல்ப்பட்டுள்ளனர். மேலும் விராட் கோலி பெங்களூரு அணிக்காக 2013-2021 வரை கேப்டனாக இருந்துள்ளார். அதனால் மீண்டும் விராட் கோலியே ஆர்சிபி அணியை வழிநடத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இது குறித்து ஆர்சிபியின் டைரக்டர் மோ போபாத்திடம் கேட்ட போது, “விராட் கோலி எங்கள் அணியின் முக்கிய நபர் மற்றும் மூத்த வீரர், ஆனால் அவருக்கு கேப்டன்சி கொடுப்பது குறித்து நாங்கள் இன்னும் எதுவும் முடிவு செய்யவில்லை. கேப்டன் யார் என்பதை நாங்கள் சில காலம் கழித்து தான் முடிவு செய்தோம். மேலும் ஏலத்தின் போது விராட் கோலி எங்களுக்கு சில பரிந்துரைகளை அனுப்பினார் என போபாத் தெரிவித்தார்.
36 வயதாகும் விராட் கோலி ஆர்சிபி அணியை 143 போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தியுள்ளார். இதனால் அவரது அனுபவத்தின் அடிப்படையில் அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக மீண்டும் வருவார் என்று தெரிகிறது.
RCB அணி விவரம் 2025:
விராட் கோலி, ரஜத் படிதார், யாஷ் தயால், லியாம் லிவிங்ஸ்டன் (ரூ. 8.75 கோடி), பில் சால்ட் (ரூ. 11.50 கோடி), ஜிதேஷ் சர்மா (ரூ. 11 கோடி), ஜோஷ் ஹேசில்வுட் (ரூ. 12.50 கோடி), ரசிக் தார் (ரூ. 6 கோடி), சுயாஷ் சர்மா (ரூ. 2.60 கோடி), க்ருணால் பாண்டியா (ரூ. 5.75 கோடி), புவனேஷ்வர் குமார் (ரூ. 10.75 கோடி), ஸ்வப்னில் சிங் (ரூ. 50 லட்சம்), டிம் டேவிட் (ரூ. 3 கோடி), ரொமாரியோ ஷெப்பர்ட் (ரூ. 1.50 கோடி), நுவான் துஷாரா (ரூ. 1.60 கோடி) ), மனோஜ் பந்தேஜ் (ரூ. 30 லட்சம்), ஜேக்கப் பெத்தேல் (ரூ. 2.60 கோடி), தேவ்தத் படிக்கல் (ரூ. 2 கோடி), ஸ்வஸ்திக் சிகாரா (ரூ. 30 லட்சம்), லுங்கி என்கிடி (ரூ. 1 கோடி), அபிநந்தன் சிங் (ரூ. 30 லட்சம்), மோஹித் ராத்தே (ரூ. 30 லட்சம்).