ஐ.பி.எல் தொடர்:


சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானதுஅந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம்அதன்படிகடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளதுஅந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறதுஇந்நிலையில் இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் தொடர்களிலேயே அதிக ஸ்டம்பிங் செய்த முதல் 5 விக்கெட் கீப்பர்கள் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்:


பார்தீப் படேல்:


இந்த பட்டியலில் 5 வது இடத்தில் இருப்பவர் பார்தீப் படேல். கடந்த 2008 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) அறிமுகமான பார்த்தீவ் படேல், சென்னை சூப்பர் கிங்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போன்ற பல்வேறு அணிகளுக்காக விளையாடியுள்ளார்பார்த்தீவ் படேல் 139 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 16 ஸ்டம்பிங், 65 கேட்ச் மற்றும் 81 டிஸ்மிஸ்கள் செய்துள்ளார்.


ராபின் உத்தப்பா:


இந்த பட்டியலில் 4 வது இடத்தில் இருப்பவர் ராபின் உத்தப்பா. ஒரு ஸ்டைலான வலது கை விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன்.கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். அதன்படி 205 போட்டிகள் விளையாடியுள்ளஇவர் 32 ஸ்டம்பிங், 58 கேட்ச் மற்றும் 90 டிஸ்மிஸ்கள் செய்துள்ளார்.


விருத்திமான் சாஹா:


மூன்றாவது இடத்தில் இருப்பவர் விருத்திமான் சாஹா. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல் தொடர்களில் விளையாடி வரும் இவர் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் 11 பஞ்சாப் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். இதில், 161 போட்டிகளில் 24 ஸ்டெம்பிங், 82 கேட்ச் மற்றும் 106 டிஸ்மிஸ்கள் செய்துள்ளார்.


தினேஷ் கார்த்திக்:


தினேஷ் கார்த்திக் இந்த பட்டியலில் 2 வது இடத்தில் இருக்கிறார். அதன்படி 2008 ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் லயன்ஸ்,கிங்ஸ் 11 பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளில் விளையாடியுள்ளார். அதன்படி, 161 போட்டிகளில் விளையாடியிருக்கும் இவர் 36 ஸ்டெம்பிங், 133 கேட்ச் மற்றும் 169 டிஸ்மிஸ்கள் செய்துள்ளார்.


எம்.எஸ்.தோனி:


சென்னை ரசிகர்களால் தல என்று அழைக்கப்படும் எம்.எஸ்.தோனி தான் ஐ.பி.எல் தொடரில் அதிக ஸ்டெம்பிங் செய்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். சென்னை அணிக்காக விளையாடி வரும் இவர் 250 .பி.எல் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில், 42 ஸ்டெம்பிங், 138 கேட்ச் மற்றும் 180 டிஸ்மிஸ்கள் செய்து அசத்தியிருக்கிறார் தோனி.


மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!


மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!