ஐபிஎல் 2023 இன் லீக் போட்டிகள் முடிவடைந்தது, பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைகிறது. குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய மூன்று அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. குறிப்பாக இந்த சீசன் பேட்ஸ்மேன்களுக்கான சீசனாக அமைந்துள்ளது. அதிகமான 200+ ரன்கள் வந்த தொடர் என்பது குறிப்பிடத்தக்கது, அதே சமயத்தில் பல வீரர்கள் செஞ்சுரி அடித்து அசத்தியுள்ளனர். இந்நிலையில் ஐபிஎல் 2023 இன் குரூப் ஸ்டேஜில் வியக்கவைத்த ஐந்து சிறந்த பேட்ஸ்மேன்களை பட்டியலிட்டுள்ளோம்.


ஃபாஃப் டு பிளெசிஸ் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)


கண்டிப்பாக இவருக்குதான் இதில் முதலிடம். ஆரஞ்சு கேப் வைத்திருப்பதுடன் எல்லா போட்டிகளிலும் தனது பங்களிப்பை அளித்து அணிக்கு பெரியளவில் உதவியவர் இவர் ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ். இந்த சீசனில் 730 ரன்கள் குவித்து இப்போதைக்கு முதலிடத்தில் உள்ளார். அவரை விரைவில் கில் முந்துவதற்கு வாய்ப்புகள் உண்டு. டு பிளெஸ்ஸிஸ் 58.5 சராசரியில் பேட் செய்து, 154 என்ற சிறந்த ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். அதோடு அவர் இந்த சீசனில் 8 அரைசதங்கள் அடித்துள்ளார். இதுவே இந்த சீசனில் ஒரு வீரரின் அதிகபட்ச அரைசதம் ஆகும்.



யஷஸ்வி ஜெய்ஸ்வால் (ராஜஸ்தான் ராயல்ஸ்)


ஆர்ஆர் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இளம் வீரர் இந்த சீசனில் 625 ரன்கள் குவித்துள்ளதோடு பல மேட்ச் வின்னிங் ஆட்டங்கள் ஆடியுள்ளார். 48 என்ற அற்புதமான சராசரியுடன், ஜெய்ஸ்வால் அந்த அணிக்கு ஒரு தூணாக திகழ்ந்துள்ளார். அவரது அதிரடியான தொடக்கங்கள் பெரும்பாலான போட்டிகளில் ராயல்ஸுக்கு வலுவான அடித்தளத்தை வழங்கியுள்ளன. குறிப்பாக மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக அவர் தனது முதல் ஐபிஎல் சதத்தையும் பதிவு செய்தார், அதில் அவர் 62 பந்துகளில் 124 ரன்கள் எடுத்தார். அதுவே இந்த ஐபிஎல்-இல் ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ரன். அதோடு ஜெய்ஸ்வால் 5 அரைசதங்களையும் அடித்துள்ளார். துரதிர்ஷ்டவசமாக அந்த அணியால் பிளே-ஆஃப் சுற்றுக்கு வர முடியாமல் போனது.


தொடர்புடைய செய்திகள்: Whatsapp Edit Message: மெசேஜ் தப்பாயிடுச்சா? அடுத்த 15 நிமிடங்களுக்குள்...புதிய அப்டேட்டை அறிவித்த மார்க் சக்கர்பெர்க்!


டெவோன் கான்வே (சென்னை சூப்பர் கிங்ஸ்)


டெவோன் கான்வேயின் பேட்டிங் இந்த ஆண்டு சிஎஸ்கேயின் எழுச்சியின் முக்கிய பாகங்களில் ஒன்றாகும். மோசமான IPL 2022 தொடருக்கு பின், CSK இந்த சீசனில் பிளேஆஃப்களில் உள்ளது. அதற்கு கான்வே பெரும் பங்கு வகித்துள்ளார். தொடக்க ஆட்டக்காரர் கான்வே இதுவரை 14 போட்டிகளில் 585 ரன்கள் எடுத்துள்ளார், சராசரியாக 53 மற்றும் ஸ்டிரைக் ரேட் 139 வைத்துள்ளார். கான்வே ஏற்கனவே 6 அரைசதங்களை அடித்துள்ளார், ஆனால் அவருக்கு பிளே ஆஃப் சுற்றில் மேலும் சில வாய்ப்புகள் உள்ளன. 



ரிங்கு சிங் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)


இந்த பட்டியலில் உள்ள ஒரே ஓப்பனர் அல்லாத பேட்ஸ்மேன் இவர்தான். இந்த சீசனில் அவர் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக ரிங்கு சிங் இந்த பட்டியலில் உள்ளார். இவர்தான் பல சமயங்களில், தொடர்ச்சியாக அணியின் மீட்பராக செயல்பட்டுள்ளார். குஜராத் உடனான போட்டியில் கடைசி ஓவரில் 5 சிக்ஸர் அடித்து, ஒரே ஓவரில் 31 ரன்கள் குவித்து வெற்றியை பெற்றுத் தந்ததை யாராலும் மறக்க முடியாது. 474 ரன்களுடன், ரிங்கு ஆரஞ்சு தொப்பி பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளார், ஆனால் அவரது ஒவ்வொரு ரன்னும் கொல்கத்தா அணிக்கு மிகவும் முக்கியமான சமயங்களில் வந்தவை என்பதுதான் ஹைலைட்.


சுப்மன் கில் (குஜராத் டைட்டன்ஸ்)


இந்த சீசன் முழுவதும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் உறுதியான சக்தியாக ஷுப்மான் கில் இருந்தார். CSK க்கு எதிரான அவரது முதல் போட்டி அதிரடி முதல், ஆர்சிபி அணியை துவம்சம் செய்தது வரை கில் தனது முந்தைய சாதனைகள் அனைத்தையும் இந்த ஆண்டு முறியடித்துள்ளார். டைட்டன்ஸ் தொடக்க ஆட்டக்காரர் இந்த சீசனில் 680 ரன்களைக் குவித்துள்ளார், சராசரியாக 57 மற்றும் ஸ்டிரைக் ரேட் சுமார் 152 வைத்துள்ளார். இந்த சீசனில் கில் ஜிடிக்கு நங்கூரமாக இருந்து இந்த ஆண்டு 4 அரைசதங்கள் மற்றும் இரண்டு சதம் அடித்துள்ளார். அவரது முதல் ஐபிஎல் சதம் SRH க்கு எதிராக 58 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார்.