மகாராஷ்ட்ராவின் புனேவில் இன்று நடைபெறும் 23வது ஐ.பி.எல். ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித்சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி, பஞ்சாப் அணிக்காக பவுண்டரியுடன் மயங்க் அகர்வால் இன்னிங்சை தொடங்கினார். அந்த ஓவரில் மயங்க் அகர்வால் இரு பவுண்டரிகள் விளாச, அடுத்த ஓவரில் தவான் சிக்ஸர் விளாசினார்.




பஞ்சாப் கேப்டன் பவுண்டரிகளாக விளாசினார். குறிப்பாக, முருகன் அஸ்வின் வீசிய 5வது ஓவரில் இரு பவுண்டரி, சிக்ஸர் விளாசியதால் பஞ்சாப் 5 ஓவர்களிலே 50 ரன்களை எட்டியது. பவர்ப்ளே முடிவில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 65 ரன்களை விளாசியது. மயங்க் அகர்வாலும், ஷிகர்தவானும் ஓவருக்கு 10 ரன்கள் என்ற வீதத்தில் விளாசினர். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி வந்த மயங்க் அகர்வால் 30 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்ஸருடன் 50 ரன்களை விளாசினார். அரைசதம் விளாசிய சிறிது நேரத்தில் மயங்க் அகர்வால் 52 ரன்களில் சிக்ஸர் அடிக்க முற்பட்டு முருகன் அஸ்வின் பந்தில் கேட்ச் ஆனார். இதனால், தவானுடன் ஜானி பேர்ஸ்டோ ஜோடி சேர்ந்தார்.




10.1 ஓவர்களில் பஞ்சாப் அணி 100 ரன்களை தொட்டது. ஜானி பார்ஸ்டோ 13 பந்தில் 1 பவுண்டரியுடன் 12 ரன்களுடனும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லிவிங்ஸ்டன் 2 ரன்களிலும் போல்டாகி வெளியேறினர், பின்னர், ஷிகர் தவானுடன் ஜிதேஷ் சர்மா ஜோடி சேர்ந்தார், மறுமுனையில் பொறுப்புடன் ஆடி வந்த ஷிகர்தவான் அரைசதம் கடந்தார். அரைசதம் கடந்தும் அதிரடி காட்டிய ஷிகர்தவான் 50 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்ஸருடன் 70 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானர்.




மறுமுனையில் இளம் வீரர் ஜிதேஷ்சர்மா அதிரடியாக ஆடினார். உனத்கட் ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் என விளாசினார். அவருடன் ஜோடி சேர்ந்த தமிழக வீரர் ஷாரூக்கான் கடைசி ஓவரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஷாரூக்கான் 2 சிக்ஸர்கள் விளாசினார். அடுத்த பந்தில் போல்டாகினார். இருப்பினும் 6 பந்தில் 2 சிக்ஸருடன் 15 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களை குவித்தனர். ஜிதேஷ் சர்மா 15 பந்தில் 30 ரன்களுடன் களத்தில் இருந்தார்.


மும்பையில் பும்ரா மட்டும் 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண