சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி வீரர் சிராஜ் தோனியைப் போல ஹெலிகாப்டர் ஷாட் அடித்தார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. நேற்றையை போட்டியின் கடைசி பந்தில் முகமது சிராஜ் இந்த ஷாட்டை முயற்சித்து ஒரு பவுண்டரி அடித்தார். இந்த ஷாட்டை விளையாடிய பிறகு, அவர் திரும்பி  தோனியை பார்த்தார். 


ஹெலிகாப்டர் ஷாட்டிற்கு பெயர்போனவர் சிஎஸ்கே வீரர் தோனி, இது அவரின் டிரேட்மார்க் ஷாட் ஆகும். டிரேட்மார்க் ஹெலிகாப்டர் ஷாட்  தோனியால் தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் உருவாக்கப்பட்டது. இந்த வழக்கத்திற்கு மாறான ஷாட்டில், இயக்கத்தின் செயலற்ற தன்மை காரணமாக ஷாட் அடிக்கப்பட்ட பிறகு பேட்ஸ்மேனின் கைகள் சுற்றிச் செல்கின்றன. 


நிறைய பேட்ஸ்மேன்கள் இந்த ஷாட்டை விளையாட முயற்சிக்கவில்லை. ஆனால், சிஎஸ்கே அணிக்கு எதிரான நேற்றைய போட்டியின் கடைசி பந்தில் முகமது சிராஜ் இந்த ஷாட்டை முயற்சித்து ஒரு பவுண்டரி அடித்தார். இந்த ஷாட்டை விளையாடிய பிறகு, அவர் திரும்பி  தோனியை பார்த்தார். இது இன்னிங்ஸின் கடைசி பந்தாகும். இந்தப்போட்டியில் பெங்களூர் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தி வீழ்த்தியது. அத்துடன் நடப்பு தொடரில் முதல் வெற்றியையும் பதிவு செய்தது.


 






 


 


 






 


 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண