ஐ.பி.எல். தொடரின் முக்கிய ஆட்டத்தில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. புனேவில் நடைபெறும் இந்த போட்டி இரு அணிகளுக்கும் வாழ்வா? சாவா? போட்டி ஆகும்.


புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தற்போது 11 போட்டிகளில் ஆடி 5 வெற்றி, 6 தோல்விகளுடன் உள்ளது. கொல்கத்தா அணி 12 போட்டிகளில் ஆடி 5 வெற்றி 7 தோல்விகளுடன் 8வது இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் தோல்வி அடையும் அணியின் ப்ளே ஆப் வாய்ப்பு நிச்சயம் மங்கிவிடும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக போராடுவார்கள். குறிப்பாக, பெரிய ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற போராடுவார்கள்.




கொல்கத்தா அணியைப் பொறுத்தவரையில் தொடரை அற்புதமாக தொடங்கினாலும் அடுத்தடுத்த போட்டிகளில் சொதப்பி பரிதாப நிலையில் உள்ளனர். அந்த அணியின் தொடக்க வீரர்கள் வெங்கடேஷ் அய்யர், ஆரோன் பிஞ்ச் அதிரடி காட்ட வேண்டியது அவசியம், ஆரோன் பிஞ்ச் இல்லாமல் ரஹானே களமிறங்கினால் அவரும் அதிரடி காட்ட வேண்டியது அவசியம் ஆகும்.


கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடியாக ஆடுவது கொல்கத்தா அணிக்கு மிகவும் அவசியம் ஆகும். நிதிஷ்ராணா, ரிங்கு சிங்கும் பேட்டிங்கில் அசத்த வேண்டியது அவசியம். ஆல் ரவுண்டர் ரஸல் பேட்டிங் மற்றும் பந்துவீச்சிலும் அசத்த வேண்டியது அவசியம். சுழற்பந்துவீச்சாளர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரைன் தனது மாயாஜல சுழலில் எதிரணிக்கு குடைச்சல் கொடுக்க வேண்டியது அவசியம். ஷிவம் மாவி, உமேஷ்யாதவ் சிறப்பாக வீசினால் எதிரணிக்கு நிச்சயம் நெருக்கடி ஆகும்.




சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கேப்டன் வில்லியம்சன் சிறப்பான இன்னிங்சை ஆட வேண்டியது அவசியம். அவருக்கு தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது அவசியம். நிகோலஸ் பூரணும், ராகுல் திரிபாதியும் அதிரடியாக ஆடினர். மார்க்ரம் மிகவும் அதிரடியாக ஆடினால் ஹைதராபாத்திற்கு மிகவும் பக்கபலமாக அமையும்.


ஹைதராபாத் அணிக்கு உம்ரான் மாலிக் வேகத்தில் எக்ஸ்பிரசாக உள்ளார். புவனேஸ்குமார், நடராஜன் கொல்கத்தாவிற்கு நெருக்கடி அளிக்க வேண்டியது அவசியம். இரு அணிகளும் இதுவரை மோதிய 23 போட்டிகளில் ஹைதராபாத் அணி 9 முறை வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா அணி 14 முறை வெற்றி பெற்றுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண