ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இம்முறை ப்ளே ஆஃப் தொடருக்கு செல்லும் வாய்ப்பை இழந்ததுள்ளது. இந்தச் சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான ராயுடு ஐபிஎல் தொடரிலிருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்து ட்வீட் செய்தார். இது தொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவு செய்தார்




அதில், “இது என்னுடைய கடைசி ஐபிஎல் தொடர் என்பதை தெரிவிக்கிறேன். 13 ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் நான் இரண்டு அணிகளுக்காக விளையாடியுள்ளேன். மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரண்டு அணிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்” எனப் பதிவிட்டிருந்தார். 


 






ஆனாலும் ட்விட்டரில் பதிவிட்ட சில நிமிடங்களில் தன்னுடைய ட்விட்டர் பதிவை  ராயுடு நீக்கியுள்ளார். இதனால் அவருடைய ஓய்வு தொடர்பான அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 2004ஆம் ஆண்டு யு-19 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டனாக இவர் செயல்பட்டார். அதன்பின்னர் பிசிசிஐ அணிக்கு எதிராக தொடங்கப்பட்ட ஐசிஎல் தொடரில் இவர் பங்கேற்றார். இதன்காரணமாக இவர் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார். இதைத் தொடர்ந்து மீண்டும் ஐசிஎல் தொடரில் விளையாடிய வீரர்களுக்கான தடை நீக்கப்பட்டது. 


2011ஆம் ஆண்டு இவர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களமிறங்கினார். அப்போது முதல் மும்பை இந்தியன்ஸ் அணியில் முக்கிய வீரராக இவர் இருந்தார். 2018ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது வரை 187 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ராயுடு 4187 ரன்கள் விளாசியுள்ளார். நடப்புத் தொடருடன் அவர் ஓய்வு பெற உள்ளதாக பதிவிட்டிருந்த ட்விட்டர் பதிவு பலரிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பதிவு தொடர்பான தெளிவான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண