மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற லக்னோ மற்றும் ராஜஸ்தான் அணிகள் இடையேயான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. ராஜஸ்தான் அணியின் ஆட்டத்தை ஜோஸ் பட்லரும், தேவ்தத் படிக்கல்லும் நிதானமாக ஆடினர். 5 ஓவர்களில் 42 ரன்களை ராஜஸ்தான் எடுத்தது.
அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜோஸ் பட்லர் ஆவேஷ்கான் வீசிய பந்தில் 11 பந்தில் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 13 ரன்கள் எடுத்த நிலையில் போல்டானார். இதனால், ராஜஸ்தான் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் நிதானமாக ஆடினர். ஆனாலும், அவர் ஹோல்டர் பந்தில் எல்.பி.டபுள்யூ ஆகி 13 ரன்களில் அவுட்டானார். தொடக்க வீரராக களமிறங்கிய படிக்கல் 29 பந்தில் 29 ரனகள் எடுத்த நிலையில் அவுட்டானர்.
அடுத்த சில நிமிடங்களில் வான்டர் டுசென்னும் 4 ரன்களில் ஆட்டமிழக்க, 67 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து ராஜஸ்தான் தடுமாறியது. அப்போது, ராஜஸ்தானின் அதிரடி ஆட்டக்காரர் ஹெட்மயரும், அஸ்வினும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து நிதானமாக ஆடினர். மேற்கொண்டு விக்கெட்டுகள் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக இருவரும் நிதானமாக ஆடினர். இதனால், ராஜஸ்தான் ஸ்கோர் மெல்ல மெல்ல ஏறியது.
15வது ஓவருக்கு பிறகு ஹெட்மயர் அதிரடியில் இறங்கினார். இதனால், ராஜஸ்தான் ஸ்கோர் ஏறத்தொடங்கியது. அதிரடியாக ஆடிய ஹெட்மயர் 32 பந்துகளில் அரைசதம் விளாசினார். கடைசி கட்டத்தில் ஹெட்மயரின் அதிரடியால் ராஜஸ்தான் அணி 150 ரன்களை கடந்தது. 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. ஹெட்மயர் ஆட்டமிழக்காமல் 36 பந்துகளில் 1 பவுண்டரி 6 சிக்ஸருடன் 59 ரன்களுடன் களத்தில் இருந்தார். அஸ்வின் 28 ரன்களில் ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்