மும்பையில் உள்ள ப்ராபோர்ன் மைதானத்தில் கொல்கத்தா அணியும், டெல்லி அணியும் நேருக்கு நேர் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி, ஆட்டத்தை தொடங்கிய பிரித்விஷா அதிரடியாக பேட் செய்தார். அவருக்கு டேவிட் வார்னரும் நல்ல ஒத்துழைப்பு அளித்தார். இதனால், 4 ஓவர்களில் டெல்லி அணி 50 ரன்களை எட்டியது.




தொடர்ந்து அதிரடியாக ஆடிய டெல்லி அணியின் தொடக்க வீரர் பிரித்விஷா 27 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்ஸருடன் அரைசதம் விளாசினார். அரைசதம் அடித்த உடனே வருண் சக்கரவர்த்தி சுழலில் பிரித்விஷா போல்டானார். அவர் 51 ரன்களில் வெளியேறினார். அடுத்த களமிறங்கிய டெல்லி கேப்டன் ரிஷப்பண்ட் அதிரடியாக ஆடத்தொடங்கினார். இதனால், டெல்லி அணி 10 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது.


டேவிட் வார்னரும், ரிஷப்பண்டும் கொல்கத்தா பந்துவீச்சை நாலாபுறமும் விளாசினர். டேவிட் வார்னர் 35 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்ஸருடன் தனது அரைசதத்தை விளாசினார். மறுமுனையில் அதிரடி காட்டிய ரிஷப்பண்ட் 14 பந்தில் 2 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 27 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். 13 ஓவர்களிலே டெல்லி 150 ரன்களை கடந்தது. ஆனால், 3வது விக்கெட்டாக லலித் யாதவ் 1ரன்களில் அவுட்டானார். இருந்தாலும் டெல்லி அணி 15 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது.





சுனில் நரைன் வீசிய பந்தில் ஆபத்தான வீரர் பாவெலும் 8 ரன்களில் அவுட்டானார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் டெல்லி ரன் வேகத்தில் சற்று தொய்வு ஏற்பட்டது. தொடக்கம் முதல் நம்பிக்கை அளித்து வந்த டேவிட் வார்னர் 45 பந்தில் 6 பவுண்டரி 2 சிக்ஸருடன் 61 ரன்களில் அவுட்டானார். இதனால், கடைசி கட்டத்தில் டெல்லி ரன்களை எடுக்கத் தடுமாறியது.





இதையடுத்து, அக்‌ஷர் படேலும், ஷர்துல் தாக்கூரும் அதிரடியில் இறங்கினர். உமேஷ் யாதவ் வீசிய பந்தில் ஷர்துல் தாக்கூர் 2 சிக்ஸரும், அக்‌ஷர் படேல் 1 சிக்ஸரும், 1 பவுண்டரியும் விளாசினர். கடைசி ஓவரிலும் ஷர்துல் தாக்கூர் சிக்ஸரும், பவுண்டரியும் விளாசியதால் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்தது. இந்த சீசனில் இதுவே அதிகபட்ச ரன்னாகும்.  கொல்கத்தா அணியில் சுனில் நரைன் மட்டும் 4 ஓவர்களில் 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஷர்துல் தாக்கூர் 11 பந்தில் 29 ரன்னுடனும், அக்‌ஷர் படேல் 14 பந்தில் 22 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண