ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பையில் உள்ள ப்ராபோர்ன் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன.


இந்த தொடரில் அறிமுக அணியாக களமிறங்கினாலும் குஜராத் அணி தொடர் தொடங்கியது முதலே பலமிகுந்த அணியாக வலம் வருகிறது. மற்ற அணிகளுடன் ஒப்பிடும்போது குஜராத் அணி மிகுந்த பலமிகுந்த அணியாக வலம் வருகிறது.




குஜராத் அணிக்கு தொடக்க வீரர்கள் சஹா, சுப்மன்கில் தொடர்ந்து அருமையான தொடக்கத்தை அளித்து வருகின்றனர். டேவிட் மில்லர், அபினவ் மனோகரும் தங்களது அதிரடியான பார்மை இந்த போட்டியிலும் தொடர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தனது அதிரடியை இந்த போட்டியில் காட்டுவார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.


கடந்த போட்டியில் பேட்டிங்கில் அசத்தி குஜராத்திற்கு திரில் வெற்றியை அளித்த ரஷீத்கான் அதிரடி பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் இன்று தொடரும் என்று எதிர்பார்க்கலாம். பந்துவீச்சில் பெர்குசன் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால் எதிரணிக்கு நெருக்கடி நிச்சயம். ஷமி வழக்கம்போல தனது சிறப்பான பந்துவீச்சை இந்த போட்டியிலும் வெளிப்படுத்தலாம். ராகுல் திவேதியா ஆல் ரவுண்டராக இந்த போட்டியிலும் ஜொலிப்பார் என்று குஜராத் ரசிகர்கள் நம்புகின்றனர்.




பெங்களூர் அணி தொடக்கத்தில் பலமான அணியாக விளையாடினாலும், கடந்த ஓரிரு போட்டிகளில் தோல்வி அடைந்ததால் அந்த அணி மீண்டு வரவேண்டியது அவசியம் ஆகும். பெங்களூர் கேப்டன் பாப் டுப்ளிசிஸ் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். மீண்டும் தொடக்க வீரராக அனுஜ் ராவத் இந்த போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ளது.


முன்னாள் கேப்டன் விராட்கோலியின் பார்ம் அனைவருக்கும் கவலை அளித்து வருகிறது. அவர் மீண்டு வந்தால் பெங்களூர் அணிக்கு அசுர பலம். மேக்ஸ்வெல் பேட்டிங்கில் அதிரடி காட்ட வேண்டியது அவசியம். ஷாபாஸ் அகமது, பிரபுதேசாய் பொறுப்புடன் பேட் செய்ய வேண்டியது அவசியம்.




பெங்களூர் அணியின் மிகப்பெரிய நம்பிக்கை தினேஷ் கார்த்திக்கும் தனது அதிரடி ஆட்டத்தை இந்த போட்டியில் வெளிப்படுத்தினால்தான் ப்ளே ஆப் வாய்ப்பை பிரகாசமாக்க முடியும். பந்துவீச்சில் ஹேசில்வுட், ஹர்ஷல் படேல் சிறப்பாக பேச வேண்டியது அவசியம். முகமது சிராஜ் கட்டுக்கோப்பாக பந்துவீச வேண்டியது அவசியம்.


புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் 8 போட்டிகளில் ஆடி 1 தோல்வி 7 வெற்றியுடன் உள்ளது. 9 போட்டிகளில் ஆடி 5 வெற்றி 4 தோல்வியுடன் 5வது இடத்தில் உள்ள ஆர்.சி.பி. அணி கட்டாய வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் களமிறங்குகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண