ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. டிக் காக்(42) மற்றும் தீபக் ஹூடா(34) ஆகியோரின் ஆட்டத்தால் லக்னோ அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது. 


 


இதைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் மயாங்க அகர்வால் மற்றும் ஷிகர் தவான் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கேப்டன் மயாங்க் அகர்வால் 17 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து சமீரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஷிகர் தவான் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ராஜ்பக்சா 9 ரன்களில் க்ரூணல் பாண்ட்யா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்காரணமாக பஞ்சாப் அணி 8 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்தது.


 




ஒருபக்கம் விக்கெட் விழுந்தாலும் மறுபக்கம் ஜானி பெர்ஸ்டோவ் ஒருமுனையில் தொடர்ந்து அதிரடி காட்டி வந்தார். அவர்  28 பந்துகளில் 5 பவுண்டரிகள் உதவியுடன் 32 ரன்கள் எடுத்து சமீரா ஆட்டமிழந்தார். லியாம் லிவிங்ஸ்டோன் 18 ரன்களுடன், ஜித்தேஷ் சர்மா 2 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனால் 16 ஓவர்களின் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்திருந்தது. பஞ்சாப் அணி வெற்றி பெற கடைசி 4 ஓவர்களில் 49 ரன்கள் தேவைப்பட்டது. 


 


அப்போது ரபாடா மொஹ்சின் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ரிஷி தவான் மட்டும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது. இதனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண