ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏறத்தாழ ப்ளே ஆப் சுற்றை உறுதி செய்யும் அளவிற்கு போட்டிகள் நெருங்கிவிட்டன. இதனால், ஒவ்வொரு அணியும் தங்களது அடுத்தடுத்த போட்டிகளில் வென்று ப்ளே ஆப் சுற்றை உறுதி செய்ய காத்திருக்கின்றன.


இந்த நிலையில், மும்பையின் வான்கடே மைதானத்தில் இன்று நடக்கும் 37-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. 5 முறை ஐ.பி.எல். சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணிக்கு இந்த தொடர் மறக்கப்பட வேண்டிய தொடராக அமைந்துள்ளது. 7 போட்டிகளில் ஆடி 7 போட்டிகளிலும் தோல்வியடைந்து முதல் அணியாக தொடரை விட்டு வெளியேறியுள்ளது.




அதேசமயம் புதிய அணியாக ஐ.பி.எல். தொடரில் அடியெடுத்து வைத்துள்ள லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி சிறப்பாக ஆடி வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தனது ப்ளே ஆப் சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்திக்கொள்ள லக்னோ முயற்சிக்கும். லக்னோ அணியை பொறுத்தவரை அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் அசத்தலான பார்மில் உள்ளார். குயின்டின் டி காக், மணீஷ் பாண்டே அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தினால் அவர்களது ஸ்கோர் எகிறும். தீபக் ஹூடா, ஆயுஷ் பதோனி மிடில் வரிசையில் அசத்த காத்துள்ளனர்.


கடைசி கட்டத்தில் அதிரடி காட்ட மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஜேசன் ஹோல்டர் உள்ளனர். பந்தவீச்சில் ஜேசன் ஹோல்டர், ஆவேஷ்கான், சமீரா ஆகியோர் அசத்த உள்ளனர். சுழலில் ரவி பிஷ்னோய் மிரட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




மும்பை அணி தொடர்ச்சியாக தோற்றாலும் பேட்டிங்கில் வலுவாகவே உள்ளது. கேப்டன் ரோகித்சர்மா – இஷான்கிஷான் பார்முக்கு திரும்பினால் அதிரடி நிச்சயம். தொடர்ந்து சூர்யகுமார் யாதவ்தான் மும்பை அணிக்கு தூணாக உள்ளார். அவரது அதிரடி இந்த ஆட்டத்திலும் தொடரும் என்று நம்பலாம். திலக் வர்மாவும், ப்ரெவிசும் தங்களது அதிரடியை காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொல்லார்டும் ரன்களை சேர்க்க வேண்டியது கட்டாயம். வேகத்தில் பும்ரா, மில்ஸ், உனத்கட் நன்றாக வீச வேண்டியது கட்டாயம்.


புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ள லக்னோ அணி 7 போட்டிகளில் ஆடி 4 வெற்றி, 3 தோல்விகளுடன் உள்ளது. மும்பை அணி கடைசி இடத்தில் புள்ளிப்பட்டியலில் உள்ளது. லக்னோ இந்த போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முன்னேற வாய்ப்புள்ளது. அதேசமயம் மும்பை அணி முதல் வெற்றியை பெறுமா? என்று அந்த அணியின் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண