இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்களின் பெரிய திருவிழாவாக கருதப்படும் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 26 ம் தேதி தொடங்கப்பட்டு தற்போது வரை வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணம் என்பதால் மும்பையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மைதானங்களில் 50 சதவீத பார்வையாளர்களுடன் நடத்தப்பட்டு வருகிறது. 


அனைத்து லீக் போட்டிகளும் மும்பையில் நடத்தப்பட்டு வரும் நிலையில் நாக் - அவுட் மற்றும் இறுதிப் போட்டி எங்கு நடைபெறும் என்ற தகவல் மட்டும் வெளியாகாமல் இருந்தது. இந்தநிலையில், அதுகுறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி வருகின்ற மே 29 அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.


பிசிசிஐ உச்ச கவுன்சில் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி உள்பட பலரும் கலந்துகொண்டு பல்வேறு முக்கிய முடிவுகள் குறித்து விவாதித்தனர். அதன்படி, இறுதிப் போட்டி வருகின்ற மே 29 அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் என்றும், இதே மைதானத்தில் மே 27ஆம் தேதி இரண்டாவது பிளே-ஆஃப் போட்டியும் நடைபெற இருக்கிறது. மற்ற இரண்டு நாக் அவுட் சுற்று  ஆட்டங்களும் ஈடன் கார்டனில் கொல்கத்தா மைதானத்தில் மே 24 மற்றும் 26 தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த அனைத்து போட்டிகளிலும் 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


லக்னோவில் மகளிர் டி20 போட்டி :


மகளிர் டி20 போட்டி மே 24 முதல் லக்னோவில் உள்ள ஏகானா ஸ்டேடியத்தில் நடைபெறும். போட்டியில் மூன்று அணிகள் நான்கு ஆட்டங்களில் விளையாடும். இந்த போட்டிகளை நடத்த பிசிசிஐ முன்னதாக புனேவை ஒரு மைதானமாக தேர்வு செய்தது. 


தென்னாப்பிரிக்கா T201 தொடருக்கான இரண்டு இடங்கள் மாற்றம் :


ஐபிஎல் தொடருக்குப் பிறகு ஜூன் மாதம் இந்தியாவுக்கு வரவிருக்கும் தென்னாப்பிரிக்காவின் சுற்றுப்பயணத்திற்கான இரண்டு இடங்களை பிசிசிஐ மாற்றியுள்ளது, இதில் ஐந்து டி20 போட்டிகள் நடைபெற இருகின்றன. சென்னையும் (இது ஜூன் 9-ம் தேதி முதல் டி20 போட்டியை நடத்துவதாக இருந்தது) மற்றும் நாக்பூரும் (மூன்றாவது டி20 போட்டியை நடத்தவிருந்தது) தற்போது இந்த மைதானங்களுக்கு பதிலாக கட்டாக் மற்றும் விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெறுகிறது. 


போட்டி விவரம் : 



  • 1வது டி20 போட்டி : ஜூன் 9, டெல்லி

  • 2வது டி20 போட்டி : ஜூன் 12,கட்டாக்

  • 3வது டி20 போட்டி : ஜூன் 14,விசாகப்பட்டினம்

  • 4வது டி20 போட்டி : ஜூன் 17, ராஜ்கோட்

  • 5வது டி20 போட்டி : 19 ஜூன், பெங்களூரு


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண