மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித்சர்மா, சூர்யகுமார் யாதவ் அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு நம்பிக்கையை ஊட்டுவதாக உணர்வதாக குறிப்பிட்டுள்ளார். 


மீண்டு வந்த மும்பை அணி


இந்த சீசனை மந்தமாக தொடங்கிய மும்பை அணி, தொடரின் இரண்டாம் பாதியில் விஸ்வரூபம் எடுத்து வந்துள்ளனர். அணியை போலவே, சூர்யகுமார் யாதவ் ஆரம்பத்தில் சொதப்ப, இரண்டாம் பாதியில் சிறந்த நிலைக்குத் திரும்பினார். நேற்றைய போட்டியில் டேபிள் டாப்பர்களான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக மும்பை அணி 27 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தனது முதல் ஐபிஎல் சதத்தைப் பதிவு செய்த சூரியகுமார் யாதவ், வெறும் 49 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் எடுத்தார்.



ரோஹித் ஷர்மா புகழாரம்


அவர் தன்னம்பிக்கையை திரும்ப பெற்றுவிட்டார். நாங்கள் வலது-இடது என களமிறக்க விரும்பினோம், ஆனால் சூரியகுமார் உள்ளே செல்ல விரும்பினார்," என்று போட்டிக்கு பிந்தைய பேட்டியில் ரோஹித் கூறினார். "அவருக்கு பெரும் நம்பிக்கை உருவாகி இருக்கிறது, அது அணியின் மற்றவர்களிடமும் பரவுகிறது. ஒவ்வொரு ஆட்டமும் புதிதாகத் தொடங்க வேண்டும், முந்தைய ஆட்டத்தை திரும்பிப் பார்க்கக்கூடாது. சில சமயங்களில் நீங்கள் உட்கார்ந்து பெருமைப்படலாம், ஆனால் அவர் அப்படி செய்யவில்லை," என்று கூறினார்.


தொடர்புடைய செய்திகள்: Karnataka Election Results 2023 LIVE: வீணாய்ப் போன வியூகம்; தென்னிந்தியாவில் இருந்து நடையைக் கட்டும் பாஜக! தகவல்கள் உடனுக்குடன்..!


கனவை குலைத்த ரஷீத் கான்


இந்த போட்டியில் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை விட்டுவிட்ட குஜராத் அணியை காப்பாற்ற யாரும் வராத நேரத்தில் மும்பை அணி பெரிய வெற்றியை பெறும் என்ற நிலை இருந்தது. ஆனால் வந்து இறங்கி, வெறும் சிக்சர்களாக விளாசிய ரஷித் கான் 32 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் எடுத்து குஜராத் அணியின் தோல்வி ரன் வித்தியாசத்தை வெகுவாக குறைத்தார். ரன் ரேட்டில் பெரிய வித்தியாசம் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த மும்பை அணியின் கனவில் மண்ணை அள்ளி போட்டார் ரஷீத்.



ஆட்டநாயகன் சூரியகுமார்


"குறிப்பாக எங்கள் பார்வையில் இது ஒரு சுவாரஸ்யமான ஆட்டம், இரண்டு புள்ளிகளைப் பெற்றதில் மகிழ்ச்சி. முதலில் பேட்டிங் செய்து பின்னர் பந்து வீச்சு மூலம் அவர்களை கட்டுப்படுத்துவது மகிழ்ச்சியாக இருந்தது. நாங்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை எடுத்தோம், டி20 வடிவத்தில் அதைக் கண்டிப்பாக செய்ய வேண்டும். எங்கள் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு முயற்சி சிறப்பாக இருந்தது," என்று ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட சூர்யகுமார் யாதவ் கூறினார்.