Washington Sundar: எஞ்சிய போட்டிகளில் வாஷிங்டன் சுந்தர் இனி இல்லை! - ஹைதராபாத் அணியின் முடிவுக்கு காரணம் என்ன?
IPL 2023: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வாஷிங்டன் சுந்தர் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக்கின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்
Continues below advertisement

வாஷிங்டன் சுந்தர் (Pic: Washington Sundar Twitter Page)
Washington Sundar: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வாஷிங்டன் சுந்தர் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக்கின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் என்று சன்ரைசர்ஸ் அணி தெரிவித்துள்ளது.
Continues below advertisement
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது ட்விட்டரில், “வாஷிங்டன் சுந்தர் தொடை காயம் காரணமாக 2023 ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். விரைவில் குணமடையுங்கள், வாஷி” என்று பதிவிட்டுள்ளது.
வாஷிங்டன் சுந்தரின் விலகல் சன்ரைசர்ஸ் அணிக்கு பெரிய பின்னடைவாக இருக்கும். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை நடந்துள்ள ஆட்டங்களில் இரண்டு வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தற்போது நான்கு புள்ளிகளைக் கொண்டுள்ளது மற்றும் சனிக்கிழமையன்று டெல்லி கேப்பிடல்ஸை எதிர்கொள்கிறது.
Continues below advertisement
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.