SRH vsDC Score LIVE: மார்க்ரம் திட்டம் பலித்தது.. டெல்லியை வீழ்த்தி பழிவாங்கிய ஐதராபாத் அபார வெற்றி

ஐபிஎல் தொடரின் இன்றைய இரண்டாவது லீக் போட்டியில், டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன.

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 29 Apr 2023 11:12 PM
டெல்லி அணி தோல்வி

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

நடராஜன் மிரட்டல்..

நடராஜன் பந்துவீச்சில் சர்ப்ராஸ் கான் கிளீன் போல்டானார்

மிரட்டும் மார்கண்டே..

12 ரன்கள் எடுத்து இருந்த பிரியம் கர்க், மார்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்

டெல்லி அணிக்கு வெற்றி வாய்ப்பு?

டெல்லி அணி வெற்றி பெற 36 பந்துகளில் 69 ரன்கள் அவசியம்

மார்ஷ் அவுட்

அதிரடியாக விளையாடி வந்த மார்ஷ் 63 ரன்களில் ஆட்டமிழந்தார்

அடுத்த விக்கெட்டையும் இழந்த டெல்லி

மணிஷ் பாண்டே வந்த வேகத்திலேயே வெறும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்

அட்டகாசமான கேட்ச்சை பிடித்த மார்க்ண்டேயா

போட்டியின் 12வது ஓவரில் சால்ட் அடித்த பந்தை, பந்தை வீசிய மார்கண்டேயா அற்புதமாக கேட்ச் பிடித்து அசத்தினார்.

மிட்செல் மார்ஷ் அரைசதம்

28 பந்துகளில் அரைசதம் கடந்தார் மிட்செல் மார்ஷ்

10 ஓவர்க்ள் முடிந்தது.. டெல்லிக்கு வெற்றி வாய்ப்பு

10 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 105 ரன்களை குவித்துள்ளது.

100 ரன்களை எட்டிய டெல்லி அணி

மிட்செல் மார்ஷ் - சால்ட் கூட்டணி 100 ரன்களை சேர்த்ததன் மூலம், டெல்லி அணியும் 100 ரன்களை கடந்தது 

அரைசதம் விளாசினார் சால்ட்

29 பந்துகளில் அரைசதம் விளாசினார் சால்ட்

ரன்களை வாரிக்கொடுத்த உம்ரான் மாலிக்

உம்ரான் மாலிக் வீசிய ஒரு ஓவரிலேயே டெல்லி அணி 22 ரன்களை சேர்த்தது

மிரட்டும் மார்ஷ் - சால்ட் கூட்டணி:

மார்ஷ் - சால்ட் கூட்டணி ஐதராபாத் பந்துவீச்சை பவுண்டரியும், சிக்சர்களுமாக விளசி வருகிறது

பவர்-பிளே முடிந்தது..

பவர்-பிளேயின் 6 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 57 ரன்களை சேர்த்துள்ளது.

அரைசதம் கடந்த டெல்லி

5.1 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி அரைசதம் கடந்துள்ளது.

பேட்டிங்கிலும் அசத்தும் மார்ஷ்

பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய மார்ஷ், பேட்டிங்கிலும் அதிரடியாக விளையாடி வருகிறார்

4 ஓவர்கள் முடிந்தன...

4 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ரன்களை சேர்த்துள்ளது.

டெல்லிக்கு 198 ரன்கள் இலக்கு..

20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களை குவித்தது 

கிளாசென் அரைசதம்..

25 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார் கிளாசென்

மிரட்டும் கிளாசென்...

அதிரடியாக விளையாடி வரும் மிட்செல் மார்ஷ், 22 பந்துகளில் 43 ரன்களை குவித்துள்ளார்

முடிவுக்கு வந்த கூட்டணி

சிறப்பாக விளையாடி வந்த சமத் 28 ரன்களில் ஆட்டமிழந்தார்

150 ரன்களை கடந்த ஐதராபாத்..

16 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 152 ரன்களை குவித்துள்ளது.

முடிந்தது 15 ஓவர்கள்..

15 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 135 ரன்களை குவித்துள்ளது.

விடாது தொடரும் அதிரடி..

சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும், ஐதராபாத் அணி தொடர்ந்து அதிரடியாக ரன் சேர்த்து வருகிறது.

முடிவுக்கு வந்தது அபிஷேக்கின் அராஜகம்..

அதிரடியாக விளையாடி வந்த அபிஷேக் சர்மா 67 ரன்களை சேர்த்து இருந்தபோது ஆட்டமிழந்தார்.

100 ரன்களை கடந்த ஐதராபாத்..

10.5 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 100 ரன்களை கடந்தது

100 ரன்களை கடந்த ஐதராபாத்..

10.5 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 100 ரன்களை கடந்தது

முடிந்தது 10 ஓவர்..மீளுமா ஐதராபாத்?

ஐதராபாத் அணி 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்களை சேர்த்துள்ளது.

மீண்டும் டக்-அவுட் ஆகி சொதப்பிய ப்ரூக்..

வெறும் இரண்டு பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட ப்ரூக் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்

மார்க்ரம் காலி...

ஐதராபாத் கேப்டன் மார்க்ரம் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்

அதிரடி காட்டும் ஐதராபாத்...

8 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 76 ரன்களை சேர்த்துள்ளது

அபிஷேக் சர்மா அதிரடி..

அதிரடியாக விளையாடி வரும் அபிஷேக் சர்மா 25 பந்துகளில் அரைசதம் விளாசியுள்ளார்.

வாய்ப்பை நழுவவிட்ட டெல்லி

அதிரடியாக விளையாடி வரும் அபிஷேக் சர்மா கொடுத்த கேட்ச் வாய்ப்பை நோர்ட்ஜே நழுவவிட்டார்

அமர்க்களமான பவர்-பிளே

பவர்பிளேயின் 6 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்களை சேர்த்துள்ளது. தொடக்க வீரரான அபிஷேக் சர்மா 43 ரன்களை குவித்துள்ளார் 

SRH vsDC Score LIVE: டெல்லி கேபிடல்ஸ் அணி விவரம்..!

டேவிட் வார்னர் (கேப்டன்), பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), மிட்செல் மார்ஷ், மணீஷ் பாண்டே, பிரியம் கார்க், அக்சர் படேல், ரிபால் பட்டேல், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, இஷாந்த் சர்மா, முகேஷ் குமார்

SRH vsDC Score LIVE: ஹைதராபாத் அணி விவரம்..!

மயங்க் அகர்வால், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), ஹாரி புரூக், அப்துல் சமத், மயங்க் மார்கண்டே, புவனேஷ்வர் குமார், அகேல் ஹொசைன், உம்ரான் மாலிக்

SRH vsDC Score LIVE: பந்துவீசும் டெல்லி.. பேட்டிங் செய்யும் ஹைதராபாத்...! யாருக்கு வெற்றி?

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

Background

ஐபிஎல் தொடரின் இன்றைய இரண்டாவது லீக் போட்டியில், டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு, டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்க உள்ளது.


டெல்லி - ஐதராபாத் அணிகள் மோதல்:


வார இறுதியான இன்று ஐபிஎல் தொடரில் இரண்டு லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகள் மோதிய நிலையில், இரண்டாவது போட்டியில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடங்களில் இருக்கக்கூடிய அணிகளான சன்ரைசர்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதிக்கொள்கின்ற்ன.. இந்த போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதன் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் நேரலையில் ரசிகர்கள் கண்டு களிக்கலாம். இந்த இரு அணிகளுக்கு இடையே நடப்பண்டில் ஏற்கனவே நடைபெற்ற லீக் போட்டியில், டெல்லி அணி த்ரில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


இதுவரை ஐதராபாத் அணி 


மார்க்கரம் தலைமையிலான ஐதராபாத் அணி இந்த தொடர் தொடங்கியது முதல் ஒரு அணியாக திறம்பட செயல்பட முடியாமல் உள்ளது. ஐதராபத் அணியில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களான நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தடுமாற்றமான ஆட்டத்தினையே வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வாஷிங்டன் சுந்தர் காயத்தினால் தொடரில் இருந்து முழுவதுமாக வெளியேறியுள்ளார். இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள ஐதராபாத் அணி 2 போட்டியில் மட்டும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. இந்த தொடரில் மேற்கொண்டு நீடிக்க வேண்டுமானால் இனிவரும் போட்டிகள் அனைத்திலும் ஐதராபாத் அணி வெற்றி பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பான வீரர்கள் அணியில் இருந்தாலும் ஐதராபாத் அணியால் சிறப்பான மற்றும் சவாலான ஆட்டத்தினை தொடர்ச்சியாக வெளிப்படுத்தமுடியவில்லை என்பது அந்த அணிக்கு மிகவும் வருத்தமளிக்கக்கூடியதாக உள்ளது. 


இதுவரை டெல்லி கேப்பிடல்ஸ் 


சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியைப் போல் 7 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் கடைசி இடத்தில் உள்ள அணியாக டெல்லி அணி உள்ளது. அணியின் கேப்டன் டேவிட் வார்னர் அனைத்து போட்டிகளிலும் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார். அதேபோல் அணியில் தொடர்ந்து சிறப்பாக விளையாடக்கூடிய மற்றொரு வீரர் என்றால் அது அக்சர் பட்டேல் தான். பந்து வீச்சில் பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடும் அக்சர் அணிக்கு நம்பிக்கையாக உள்ளார். டெல்லி அணியை பொறுத்தவரையில் ஆஸ்திரேலிய பட்டாளமே உள்ளது எனும் அளவிற்கு அணியில் வீரர்கள் இருந்தாலும், களத்தில் அவையெல்லாம் தவிடுபொடியாகிவிடுகின்றன. சொந்த மண்ணில் இன்று நடக்கும் போட்டியில் டெல்லி அணி வென்றால் தான் தொடரில் நீடிக்க முடியும். இனி வரும் 7 போட்டிகளும் டெல்லி அணிக்கு வாழ்வா சாவா என்பதை நிர்ணயிக்கும் போட்டிகளாகும்.  

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.