16வது சீசன் ஐ.பி.எல். தொடர் கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடத்திற்குள் நுழைவதற்காக அனைத்து அணிகளும் ஒவ்வொரு போட்டியிலும் தங்களது முழு பலத்தினை பயன்படுத்தி மல்லுகட்டி வரும் நிலையில், புள்ளிப்பட்டியலில் கடைசி இடங்களில் இருந்து முன்னேறுவதற்காக இன்று சன்ரைசர்ஸ் ஹைதரபாத் – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.


டாஸ்: 


ஹைதரபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.   இந்த சீசன் தொடங்கியது முதல் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணிகளாக சன்ரைசர்சும், டெல்லி அணியும் உள்ளது. இது இரு அணி வீரர்களுக்கும், ரசிகர்களுக்குமே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. 


புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் உள்ள வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ள மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியும் இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது மட்டுமின்றி இனி வரும் போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும். 5 தோல்விகளை தொடர்ச்சியாக பெற்ற டெல்லி அணி கடந்த போட்டியில்தான் தன்னுடைய முதல் வெற்றியை பெற்றது. சன்ரைசர்ஸ் அணி இதுவரை 2 வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. நடப்புத் தொடரில் மிகவும் பரிதாபமான நிலையில் உள்ள அணிகள் எனும் அளவிற்கு இந்த இரு அணிகளும் உள்ளன. 


பேட்டிங், பவுலிங்:


பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் ஆகியவற்றை கடந்து ஒரு அணியாக  தன்னம்பிக்கை அளவில் இரு அணி வீரர்களும் மிகவும் மோசமாக உள்ளனர். இது எதிர்வரும் போட்டிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால், தன்னம்பிக்கை அளவை இரு அணிகளும் மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். 


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளேயிங் லெவன்


அபிஷேக் சர்மா, ஹாரி புரூக், ஐடன் மார்க்ரம்(கேப்டன்), மயங்க் அகர்வால், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), மார்கோ ஜான்சன், வாஷிங்டன் சுந்தர், மயங்க் மார்கண்டே, புவனேஷ்வர் குமார், டி நடராஜன், உம்ரான் மாலிக்


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இம்பேக்ட் ப்ளேயர்கள் 


நிதிஷ் ரெட்டி, விவ்ராந்த் சர்மா, க்ளென் பிலிப்ஸ், மயங்க் டாகர், ராகுல் திரிபாதி 


டெல்லி கேப்பிடல்ஸ் பிளேயிங் லெவன்


டேவிட் வார்னர்(கேப்டன்), பிலிப் சால்ட்(விக்கெட் கீப்பர்), மிட்செல் மார்ஷ், மனிஷ் பாண்டே, சர்பராஸ் கான், அக்சர் படேல், அமன் ஹக்கிம் கான், ரிபால் பட்டேல், அன்ரிச் நார்ட்ஜே, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா


டெல்லி கேப்பிட்டல்ஸ் இம்பேக்ட் ப்ளேயர்கள் 


முகேஷ் குமார், லலித் யாதவ், பிரவீன் துபே, சேத்தன் சகாரியா, யாஷ் துல்