ஐபிஎல் தொடர் வரும் 26ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை-கொல்கத்தா அணிகள் மோத உள்ளன. ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மும்பை அணி வீரர்களின் பயிற்சி களத்தில் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் இணைந்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 


இம்முறை 8 அணிகளுடன் கூடுதலாக 2 அணிகள் என மொத்தம் 10 அணிகள் பங்கேற்க இருப்பதால், மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. அதனை அடுத்து, ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் விளையாடும். 






மேலும், நடப்பு ஐ.பி.எல். தொடரில் 25 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி அளிக்க ஐ.பி.எல். நிர்வாகம் முடிவு செய்துள்ளது. போட்டிகள் நடைபெறும் மும்பை, நவி மும்பை மற்றம் புனே மைதானங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைப்படி 25 சதவீத ரசிகர்களுக்கு மட்டும் அனுமதி அளக்கப்படும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்ததால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 


இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறது. அதில், சச்சின் டெண்டுல்கர் மும்பை அணி வீரர்கள் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு வருகை தந்திருக்கிறார். இதனால், மும்பை அணி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும்போது சச்சின் உடனிருப்பார் என தெரிகிறது.






மேலும், இந்த சீசனுக்கான அனைத்து போட்டிகளும் மும்பை, பூனே மைதானங்களில் நடைபெற உள்ளதால், இது மும்பை அணிக்கு சாதகமாக இருக்கும் என்ற கருத்து நிலவி வருகிறது. இது குறித்து பேசி இருக்கும் கேப்டன் ரோஹித் ஷர்மா, “ஏலத்தில் நிறைய புதிய வீரர்களை அணியில் சேர்த்திருக்கிறோம். அவர்களுக்கு மும்பையில் விளையாடிய அனுபவம் கிடையாது. அதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மற்ற அணிகள் மும்பையில் விளையாடாத நிலையில், நாங்கள் விளையாடவில்லை. எனவே, மும்பையில் விளையாடுவது மும்பை அணிக்கு சாதகம் என்ற பேச்சுக்கே இடமில்லை” என தெரிவித்திருக்கிறார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண