ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் சனிக்கிழமை தொடங்க உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர். இம்முறை ஐபிஎல் தொடரை நேரில் காண 25 சதவிகித பார்வையாளர்களுக்கு பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியுள்ளது. 


இந்நிலையில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் காயம் காரணமாக வெளியேறிய மார்க்வூட்டிற்கு பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதன்படி வேகப்பந்து வீச்சாளர் மார்க் வூட்டிற்கு பதிலாக லக்னோ அணியில் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஆண்ட்ரூ டை சேர்க்கப்பட்டுள்ளார். ஆண்ட்ரூ டை ஆஸ்திரேலிய அணிக்காக 32 டி20 போட்டிகளில் விளையாடி 42 விக்கெட் வீழ்த்தியுள்ளார். அத்துடன் இவர் தற்போது வரை 27 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 40 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 


 






இவரை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 1 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  மார்க் வூட்டிற்கு பதிலாக பங்களாதேஷ் அணியின் வீரர் தஸ்கின் அகமது எடுக்கப்படலாம் என்று கூறப்பட்டு வந்தது. இந்தச் சூழலில் ஆண்ட்ரூ டை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி முதல் முறையாக இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ளது. அந்த அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். 


 






முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி தன்னுடைய புதிய ஜெர்ஸியை அறிமுகம் செய்தது. அந்த அணியின் புதிய ஜெர்ஸி மற்றும் ஒரு பாடலையும் வெளியிட்டிருந்தது. அது லக்னோ ரசிகர்கள் மத்திய பெரும் வரவேற்ப்பை பெற்றது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண