ஃபாப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இன்று சின்னசாமி ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.


இந்தநிலையில் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, வழக்கமாக அணியும் சிவப்பு மற்றும் கருப்பு கலந்த ஜெர்சியை அணியாமல், பச்சை நிறத்தால் ஆன ஜெர்சியை அணிய இருக்கின்றனர். இதுகுறித்து முன்னதாக ஆர்.சி.பி. தனது ட்விட்டர் பக்கத்தில், “எங்களில் இந்த சிறப்பான க்ரீன் நிற ஜெர்சி 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் உருவாக்கப்பட்டவை. ” என்று பதிவிட்டு இருந்தது.


பச்சை நிற ஜெர்சி:


இந்த ஆண்டு ஆர்சிபி அணிக்காக தயாரிக்கப்பட்ட பச்சை நிற ஜெர்சியானது, மைதானத்தில் சேகரிக்கப்பட மறுசூழற்சி செய்யப்பட்ட கழிவுகளை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. ஆர்சிபி இந்தாண்டு தனது முதல் போட்டியில் மும்பை அணிக்கு எதிரான சின்னசாமி மைதானத்தில் விளையாடியது. அதில், 9047.6 கிலோ கழிவுகளும், 19,488 தண்ணீர் பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டது. அதேபோல், ஒவ்வொரு போட்டிக்கு பிறகும் சராசரியாக எட்டு டன் உலர் கழிவுகள், உணவுக் கழிவுகள் மற்றும் பிற மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகள் மைதானத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. 


நீல நிற ஜெர்சி:


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த 2008ம் தேதி விளையாடி வந்தாலும், கடந்த 2011ம் ஆண்டு முதல் ‘கோ க்ரீன்’ என்ற சுற்றுச்சூழல் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பச்சை நிற ஜெர்சி அணி விளையாடி வருகிறது. கடந்த 2021 ம் ஆண்டை தவிர பெங்களூர் அணி அனைத்து ஆண்டுகளும் பச்சை நிற ஜெர்சி அணிந்து விளையாடியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மட்டும் முன்களப் பணியாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் நீல ஜெர்சி அணிந்து பெங்களூரு அணி விளையாடியது. 


கடந்த 2019ம் ஆண்டு பிறகு முதல் முறையாக ஆர்சிபி அணி பச்சை நிற ஜெர்சியுடன் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இன்று விளையாடுகிறது. கடந்த 2020, 2021 மற்றும் 2022 சீசன் போட்டிகள் அனைத்தும் கொரோனா பரவல் காரணமாக ரசிகர்கள் இன்றி நடத்தப்பட்டது. 


பச்சை நிற ஜெர்சியில் ஃபாப் மற்றும் கோலி:


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாப் டு பிளெசிஸ், விராட் கோலி, முகமது சிரா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் பச்சை நிற ஜெர்சியில் இருக்கும் புகைப்படத்தை ஆர்சிபி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தது. 


பெங்களூரு அணிக்கு க்ரீன் ஜெர்சியின் ராசி எப்படி..? 


பெங்களூர் அணி பச்சை நிற ஜெர்சி அணிந்து விளையாடிய போதெல்லாம் அந்த அணிக்கு பெரியளவில் ராசியாக அமைந்ததில்லை. இதுவரை 12 போட்டிகளில் பச்சை நிற ஜெர்சியுடன் விளையாடி அதில் 3ல் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. மீதமுள்ள 8 போட்டிகளில் எதிரணிகளே வெற்றிபெற்றுள்ளனர். ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. 


போட்டிகள்: 12


முதலில் பேட்டிங் வெற்றி: 3


இரண்டாவது பேட்டிங் வெற்றி: 8


ஆர்சிபி வெற்றி: 3


எதிர் அணி வெற்றி: 8


முடிவு இல்லை: 1