ஐ.பி.எல். தொடரில் இன்று நடக்கும் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும்  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதிக் கொள்கின்றன. இதில் மிகவும் கவனிக்கப்படவேண்டிய விஷயம் என்னவென்றால், இரு அணிகளிலும் சேர்ந்து மொத்தம் மூன்று தமிழர்கள் விளையாடவுள்ளனர். குறைந்தபடசம் அணிக்கு ஒருவர் விளையாடுவது உறுதி.

 

பஞ்சாப் - ராஜஸ்தான்:

 

ராஜஸ்தான் அணியில் உள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், ஹைதரபாத் அணியுடனான போட்டியில் களமிறங்கினார். அதேபோல், முருகன் அஸ்வின் இம்பேக்ட் பிளேயர் லிஸ்ட்டில் இருந்தார். இம்முறை போட்டி அசாமில் நடைபெறுவதால் அங்கு பனிப்பொழிவிற்கான வாய்ப்பு உள்ளது. இதனால், ராஜஸ்தான் அணியின் சார்பில் ஆடும் லெவனில் முருகன் அஸ்வின் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் என இருவரும் இடம் பெற வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. 

 

அதேபோல், பஞ்சாப் அணியில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் ஷாரூக்கான் கடந்த போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிராக விளையாடினார். மிகவும் சிறப்பாக விளையாடிய அவர் அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார். மேலும், அவரது சிறப்பான ஆட்டத்தால் தொடர்ந்து அணியில் அவர் நீடிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதால், இன்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் களமிறக்கப்படலாம் என தெரிகிறது. இவர் கொல்கத்தாவுடனான போட்டியில், 7 பந்துகளை மட்டும் சந்தித்து 2 பவுண்டரிகள் விளாசியதுடன் மொத்தம் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

 

மூன்று தமிழர்கள்:

 

இந்நிலையில் இன்று கவுகாத்தியில்  நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் அணி சார்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் முருகன் அஸ்வின் என இருவரும் களமிறங்கினாலும், பஞ்சாப் அணி சார்பில் ஷாரூக்கான் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளாதாலும், மூன்று மூன்று தமிழர்கள் இன்று விளையாடுவதைப் பார்க்க முடியும். தற்போது உள்ள ஆவலே இரு அணியிலும் உள்ள மூன்று வீரர்கள் களமிறக்கப்படவேண்டும் என்பது தான். மூவரும் களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கும் போது மூவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு கிரிக்கெட் ரசிகர்களின் ஆவலாக உள்ளது. 

 

தமிழ்நாட்டினை பிரதானமாகக் கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தமிழ்நாடு முழுவதும் ரசிகர்கள் இருந்தாலும், இன்று தமிழ்நாட்டு வீரர்கள் சென்னை அணியில் ஒருவர் கூட இல்லை என்பது பெரும் கவலையான விஷயமாக பார்க்கப்படுகிறது. மேலும், ஐ.பி.எல். தொடங்கிய காலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் சென்னை அணியில் இருந்தனர். இன்று அந்த நிலை படிப்படியாக மாறி ஒருவர் கூட இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.