ஐ.பி.எல். போட்டி என்பது உலக கிரிக்கெட் அரங்கில் மாபெறும் லீக் போட்டியாக உருவெடுக்க காரணம். ஐபிஎல் போட்டிக்கு இந்தியாவில் புழங்கும் பணம் தான். 2007ஆம் ஆண்டு இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்ற சூட்டோடு தொடங்கப்பட்ட இந்த ஐபிஎல் போட்டி, அன்றைக்கு கிரிக்கெட் மீது பெரும் ஆர்வம் இருந்த இந்திய பணக்கார பிரபலங்களை கவர்ந்து இழுத்தது. அப்படி இந்தி சினிமாவில் கோலோச்சிய ப்ரீத்தி ஜிந்தா பஞ்சாப் அணியை வாங்க, ஷாருக்கான் கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஆனார். 


உரிமையாளர் முடிவு:


இந்த கிரிக்கெட் தொடரினைப் பொறுத்த வரை குதிரை மீது பந்தயம் வைப்பதைப் போன்று தான். பணம் தான் ஒரு அணியை கட்டமைக்கிறது. கிரிக்கெட்டில் நீங்கள் எவ்வளவு பெரிய கிரிக்கெட் ஜாம்பவானாக இருந்தாலும் இறுதி முடிவினை உரிமையாளர் தான் எடுப்பார். அப்படியான முடிவுகளை ஏற்று அணியில் இருப்பவர்கள் இருக்கலாம் அல்லது வெளியேறலாம். ஒரு அணி கோப்பை வெல்வதை விட போட்டிகளை தொடர்ந்து வெல்ல வேண்டும், ஒரு அணி கோர்வையாக செயல்பட வேண்டும். அணியின் சார்பில் களமிறங்கும் 11 வீரர்களுக்குள்ளும் வெளியில் அமர்ந்து பார்க்கும் அணியின் சக வீரர்களுக்குள்ளும் ஒரே எண்ணவோட்டம் இருக்க வேண்டியது மிகவும் முக்கியமானது. 





கேப்டன்கள் மாற்றம்:


ஐபிஎல் தற்போது 10 அணிகள் பங்கேற்கும் போட்டித் தொடராக இருந்து இருக்கலாம். ஆனால் அதன் ஆரம்ப காலம் தொட்டு இன்று வரை உள்ள அணிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ஒன்று.  அந்த அணி இதுவரை ஒரு முறை கூட் கோப்பையை வென்றதில்லை. மிகவும் பலமான அணியாக கருதப்பட்ட காலமும் உண்டு. ஆனாலும் கோப்பையை வெல்ல முடியாமல் போனதற்கான பெரும் காரணமாக பார்க்கப்படுவது அணியில் தொடர்ந்து கேப்டன்கள் மாற்றப்பட்டது தான்.


காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறும் போது  அணியில் கேப்டன்கள் மாற்றப்படுவது மிகவும் இயல்பான ஒன்று தான், ஆனால் ஆனியின் நிர்வாகத்தினால் கேப்டன்கள் மற்றப்படும் போது ஒரு அணியாக பஞ்சாப் அணியால் என்ன செய்திட முடியும்? அப்படி இதுவரை பஞ்சாப் அணியின் கேப்டன்களாக இருந்தவர்கள் யார் யார் என்றும் அவர்கள் தலைமையில் பஞ்சாப் அணி புள்ளிப் பட்டியலில் எந்தெந்த நிலைகளை எட்டியது என்பது குறித்து பார்க்கலாம். 



2008 -  யுவராஜ் சிங் -  இரண்டாவது இடம்


2009 - யுவராஜ் சிங்  -  5வது இடம்


2010 -  சங்ககரா & ஜெயவர்தனே -  8வது இடம்


2011 - கில்கிரிஸ்ட்  -  5வது இடம்


2012 - ஹஸ்ஸி -  6வது இடம்


2013 - கில்கிரிஸ்ட் &ஹஸ்ஸி - 6வது இடம்


2014 - பெய்லி - இரண்டாவது இடம்


2015 - சேவாக் & பெய்லி - 8வது இடம்


2016 - டேவிட் மில்லர் & முரளி விஜய் -  8வது இடம்


2017 - மேக்ஸ்வெல்  - 5வது இடம்


2018 - அஸ்வின்  -  7வது இடம்


2019 - அஸ்வின்  -  6வது இடம்


2020 - கே.எல். ராகுல் - 6வது இடம்


2021 - கே.எல். ராகுல் & அகர்வால் - 6வது இடம்  


2022 - அகர்வால் - 6வது இடம்


இந்நிலையில் தற்போது இந்த அணியின் கேப்டனாக ஷிகர் தவான் செயல்பட்டு வருகிறார். அதேபோல், நிலையான கேப்டன்களைக் கொண்டு சீரான அணியுடன் விளையாடும் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகளும் இன்னும் ஏன் கோப்பையை வெல்லவில்லை என்பதை மற்றொரு கட்டுரையில் காணலாம்.