இந்தியன் பிரிமீயர் லீக் தொடரின் 16வது சீசனின் 8வது லீக் போட்டியில் பலமான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிக் கொள்கின்றன. போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச முடிவு செய்துள்ளார்.


இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச முடிவு செய்துள்ளார். இதனால் பஞ்சாப் அணி பேட்டிங்கைத் தொடங்கவுள்ளது. 


ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் அதிகபட்சமாக ராஜஸ்தான் அணி 14 முறையும், பஞ்சாப் அணி 10 லிலும் வெற்றிபெற்றுள்ளது. இறுதியாக கடந்த ஆண்டு இரு அணிகளும் மோதிய லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் 41 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.  


பஞ்சாப் அணியின் மோசமான சாதனை


பஞ்சாப் அணியைப் பொறுத்தவரையில் தொடர்ந்து இரண்டு போட்டிகளை வென்று நான்கு ஆண்டுகள் அகிறது. இதனால், இந்த போட்டியில் வென்று இந்த மோசமான வரலாறை பஞ்சாப் அணி இன்று மாற்றுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும். 


பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவன்


ஷிகர் தவான்(கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், பானுகா ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா(விக்கெட் கீப்பர்), ஷாருக்கான், சாம் கரண், சிக்கந்தர் ராசா, நாதன் எல்லிஸ், ஹர்பிரீத் பிரார், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்


பஞ்சாப் கிங்ஸ் அணியின் இம்பேக்ட் ப்ளேயர்


ரிஷி தவான், அதர்வா டைடே, ஹர்ப்ரீத் சிங் பாட்டியா, மேத்யூ ஷார்ட், மோஹித் ரதி


ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன்


யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்(கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), தேவ்தத் பாடிக்கல், ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், கேஎம் ஆசிப், யுஸ்வேந்திர சாஹல்


ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இம்பேக்ட் ப்ளேயர்


துருவ் ஜூரல், ஆகாஷ் வசிஷ்ட், முருகன் அஷ்வின், குல்தீப் யாதவ், டொனாவன் ஃபெரீரா