RR vs LSG IPL 2023 LIVE: இறுதி ஓவர் வரை சென்ற போட்டி; ராஜஸ்தானை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய லக்னோ..!

RR vs LSG IPL 2023 LIVE: லக்னோ சூப்பர் ஜெயிண்டஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 19 Apr 2023 11:26 PM
RR vs LSG Live Score: லக்னோ வெற்றி..!

சிறப்பாக பந்து வீசிய லக்னோ அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

RR vs LSG Live Score: விக்கெட்...!

ராஜஸ்தான் அணியின் ஹெட்மயர் தனது விக்கெட்டை 2 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். 

RR vs LSG Live Score: 100 ரன்கள்..!

வெற்றி இலக்கை நோக்கி முன்னேறி வரும் ராஜஸ்தான் அணி 14.2 ஓவர்களில்  3  விக்கெட்டை இழந்து 100 ரன்கள் எடுத்துள்ளது. 

RR vs LSG Live Score: விக்கெட்..!

களமிறங்கி 2 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் சஞ்சு சாம்சன் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 

RR vs LSG Live Score: முதல் விக்கெட்..!

சிறப்பாக ஆடி வந்த ஜெய்ஸ்வால் 35 பந்தில் 44 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். 

RR vs LSG Live Score: 10 ஓவர்கள் முடிவில்..!

10 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 73 ரன்கள் சேர்த்துள்ளது. 

RR vs LSG Live Score: 50 ரன்களைக் கடந்த ராஜஸ்தான்..!

155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 7 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் சேர்த்துள்ளது. 

RR vs LSG Live Score: 155 ரன்கள் இலக்கு..!

இறுதியில் அதிரடியாக ஆடிய லக்னோ அணி ராஜஸ்தானுக்கு 155 ரன்கள் இலககாக நிர்ணயம் செய்துள்ளது. 

RR vs LSG Live Score: 15 ஓவர்கள் முடிவில்..!

15 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 4 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் எடுத்துள்ளது. 

RR vs LSG Live Score: 100 ரன்களைக் கடந்த லக்னோ..!

3 விக்கெட்டுகளை இழந்தாலும் கைவசம் விக்கெட்டுகள் இருப்பதால் லக்னோ அணி பவுண்டரிகளை விரட்டி வருகின்றனர். இதனால் 13.3 ஓவரில் 103 ரன்கள் எட்டியுள்ளது. 

RR vs LSG Live Score: மேயர்ஸ் அரைசதம்..!

தொடக்க வீரராக களமிறங்கி ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ற வகையில் சிறப்பாக விளையாடிவரும் கேயல் மேயர்ஸ் 40 பந்தில் தனது அரைசதத்தினை பூர்த்தி செய்தார். 

RR vs LSG Live Score: விக்கெட்..!

போல்ட் வீசிய 12வது ஓவரில் ஆயுஷ் பதோனி 4 பந்தில் ஒரு ரன் எடுத்த நிலையில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். 

RR vs LSG Live Score: முதல் விக்கெட்..!

சிறப்பாக விளையாடி வந்த லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் தனது விக்கெட்டை ஹோல்டர் பந்து வீச்சில் இழந்தார். இவர் 32 பந்தில் 39 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். 

RR vs LSG Live Score: அசராத பேட்டிங்..!

10 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி விக்கெட் இழக்காமல் 79 ரன்கள் சேர்த்துள்ளது. 

RR vs LSG Live Score: 50 ரன்கள்..!

தொடக்கம் முதல் நிதானமாக ஆடிவரும் லக்னோ அணி 8 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் சேர்த்துள்ளது. 

RR vs LSG Live Score: பவர்ப்ளே முடிவில்..!

பவர்ப்ளே முடிவில் லக்னோ அணி விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் சேர்த்துள்ளது. 

RR vs LSG Live Score: மிரட்டலான தொடக்கம்..!

லக்னோ அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி தனது மிரட்டலான பந்து வீச்சில் தொடங்கியுள்ளது. 

RR vs LSG Live Score: டாஸ்..!

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. 

Background

ஐ.பி.எல். தொடரின் 16வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நடப்பு தொடரின் பலமிகுந்த அணியாக உலா வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி  இன்று மற்றொரு பலமான அணியான லக்னோவுடன் மோதுகிறது. ராஜஸ்தான் அணியின் சொந்த மைதானமான ஜெய்ப்பூரில் இந்த போட்டி நடக்கிறது. ஜெய்ப்பூரில் உள்ள சவாய்மன்சிங் மைதானத்தில்  இரவு 7.30 மணியளவில் இந்த போட்டி தொடங்குகிறது.


ராஜஸ்தான் - லக்னோ:


நடப்பு தொடர் தொடங்கியது முதலே மிகவும் ஆக்ரோஷமாகவும் அதிரடியாகவும் ஆடி வரும் அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உள்ளது. இதுவரை இந்த தொடரில் ஆடிய 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியை தழுவியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதனால், 8 புள்ளிகளுடன் 1.35 நெட் ரன்ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.


கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மிகவும் பலமாகன அணியாகவே உள்ளது. அந்த அணி இதுவரை தாங்கள் ஆடிய 5 போட்டிகளில் 2 போட்டியில் மட்டுமே தோல்வியை அடைந்துள்ளது. 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று ராஜஸ்தானுடன் புள்ளிகளை சமன் செய்ய லக்னோ அணி முனைப்பு காட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


பேட்டிங் - பவுலிங்:


பேட்டிங் என்று ஒப்பிட்டு பார்த்தால் ராஜஸ்தான் அணியும், லக்னோ அணியும் சம பலத்துடன் உள்ளன. ராஜஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பலமாக ஜோஸ் பட்லர் உள்ளார். அவர் எப்போதும் எதிரணிக்கு அச்சுறுத்தலாக விளங்கும் வீரர் ஆவார். அவர் அதிரடியாக ஆடினால் ராஜஸ்தான் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயரும். அவருக்கு மற்றொரு தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் பக்கபலமாக உள்ளார். கேப்டன் சஞ்சு சாம்சன் மிகப்பெரிய பலமாக உள்ளார். எந்த நேரத்தில் இறங்கினாலும் ஆட்டத்தின் போக்கையே மாற்றும் அதிரடி காட்டும் திறமை கொண்ட சாம்சன் லக்னோவிற்கு நெருக்கடி அளிக்கும் பேட்ஸ்மேன் ஆவார். கடைசி கட்டத்தில் ஹெட்மயர் அதிரடி ராஜஸ்தானுக்கு கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


லக்னோ அணியை பொறுத்தவரை மேயர்ஸ் அதிரடியான தொடக்கத்தை அளிப்பார் என்று நம்பலாம். பவர்ப்ளேவில் அதிரடி காட்டி அசத்தி வருகிறார்.  ஸ்டோய்னிசும், பூரணும் லக்னோ அணியின் மிகப்பெரிய பலமாக உள்ளனர். இருவரும் 20 பந்துகள் வரை களத்தில் பேட் பிடித்தாலே சிக்ஸர் விருந்து வைத்துவிடுகின்றனர். லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் கடந்த போட்டியில் அரைசதம் அடித்து ஃபார்முக்கு திரும்பினாலும் அவரது வழக்கமான அதிரடி திரும்ப வேண்டியது அவசியம் ஆகும். பதோனி கடைசி கட்டத்தில் அதிரடி காட்டுவார் என்று நம்பலாம். தீபக் ஹூடாவும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.


ரசிகர்களுக்கு விருந்து:


பந்துவீச்சை பொறுத்தவரை ராஜஸ்தான் அணிக்கு பலமாக வேகத்தில் ட்ரெண்ட் போல்ட் உள்ளார். அவருடன் ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர், குல்தீப்சென் உள்ளனர். சுழலில் மிரட்டுவதற்கு அஸ்வின் மற்றும் சாஹல் கூட்டணி உள்ளது. லக்னோ அணி ராஜஸ்தானுடன் ஒப்பிடும்போது பந்துவீச்சில் சற்று பலம் குறைவாகவே உள்ளது. அந்த அணியின் மார்க்வுட், ஆவேஷ்கான், உனத்கட் ராஜஸ்தானை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.


இந்த போட்டி ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்து படைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.