ஒன்றரை மாத காலமாக நடைபெற்று வந்த ஐ.பி.எல். நாளையுடன் நிறைவு பெற உள்ளது. இறுதிப்போட்டியில் கோப்பையை வெல்ல ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியினர் ராஜஸ்தானுடன் குவாலிபையரில் தோல்வியடைந்தனர்.
ஐ.பி.எல், போட்டியில் சாம்பியன் ஆகும் பெங்களூரின் கனவு 15வது ஆண்டாக மீண்டும் கனவாகிப் போனது. இந்த நிலையில், பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டனும், தலைசிறந்த கிரிக்கெட் வீரருமான விராட்கோலி பெங்களூர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “சில நேரங்களில் வெற்றி பெறலாம். சில நேரங்களில் தோல்வியடையலாம். ஆனால், ரசிகர்கள் (12th man) படையாகிய நீங்கள் அற்புதமாக ஆதரவளித்தீர்கள். கிரிக்கெட்டை நீங்கள் சிறப்பாக ஆக்கியுள்ளனர். கற்றலுக்கு முடிவே இல்லை. ஆர்.சி.பி. நிர்வாகத்திற்கு மிகப்பெரிய நன்றி. ஆதரவளித்த பணியாளர்கள் மற்றும் அணியில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றி. அடுத்த சீசனில் சந்திக்கலாம்.”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க : IPL 2022: பும்ரா டூ ரஸல்- 2022 ஐபிஎல் தொடரில் பதிவான டாப் 5 சிறப்பான பவுலிங் ஸ்பெல்கள்..
மேலும் படிக்க : ஜோஸ் பட்லரை எனது 2-வது கணவராக ஏற்றுக் கொண்டேன் - ராஜஸ்தான் அணியின் சகவீரரின் மனைவி அதிரடி!
மேலும் படிக்க : IPL 2022: ஹர்பிரீத் எல்லை கோடு கேட்ச் முதல், விராட் கோலியின் ஒற்றை கை கேட்ச் வரை.. 2022 ஐபிஎல் டாப் 5 கேட்சுகள் !
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்