இத்தனை வருடங்களாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் சாதிக்காத ஒன்றை இந்த வருடமாவது கோப்பையை வென்று சாதிக்கும் என்று அனைத்து கிரிக்கெட் ரசிகர்களால் நம்பப்பட்டது. ஐபிஎல் தொடரில் சென்னை, மும்பை அணிக்கு பிறகு அதிக ரசிகர்கள் கொண்ட அணியாக திகழ்ந்து வருவது பெங்களூர் அணிதான். சென்னை அணி 4 முறையும், மும்பை அணி 5 முறையும் கோப்பையை வென்று அசத்தியுள்ளது. ஆனால், பெங்களூர் அணி இதுவரை 3 முறை இறுதிபோட்டி வரை சென்று தோல்வி அடைந்து கோப்பை கனவு எட்டா கனவாகவே இருந்து வருகிறது. 


இந்தமுறையாவது பெங்களூர் அணி எப்படியாவது கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2 சுற்றில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறி அதிர்ச்சியளித்தது. 


இந்தநிலையில், நான்காவது முறை இறுதிபோட்டிக்கு சென்று கோப்பையை அடிக்க பெங்களூர் அணிக்கு வாய்ப்பு கிடைத்தும் தவறவிட்டதையடுத்து நெட்டிசன்கள் பெங்களூர் அணியை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர். 


































ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008ம் ஆண்டு முதல் தற்போது 2022 வரை 15 தொடர்கள் நடந்துள்ளது. தொடக்கம் முதல் இருந்து வரும் சென்னை, மும்பை, ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் ஒருமுறையாவது கோப்பையை வென்றுள்ளது. பஞ்சாப், டெல்லி, பெங்களூர் அணிகள் இன்னும் ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. மேலும், பெங்களூர் அணி கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா அணியை போன்றது தொடரில் சிறப்பாக விளையாடினாலும் முக்கியமான போட்டிகளில் சொதப்பி வெளியேறும். அதேபோல்தான் பெங்களூர் அணிக்கும் ஐபிஎல் தொடரில் ராசியே இல்லை. கோப்பையை வெல்ல ஈசியாகவும் இல்லை. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண