2022 ஐபிஎல் தொடர் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் தோனி தவிர மற்ற வீரர்கள் பேட்டிங்களில் சற்று சொதப்பினர். இதனால் இரண்டாவது போட்டிக்கு முன்பாக சென்னை அணி பேட்டிங்கை சரி செய்துவிடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.


இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய இரண்டாவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை எதிர் கொண்டுள்ளது. இந்தப் போட்டியில் மொயின் அலி இடம் பிடித்திருக்கிறார். இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ், ஃபீல்டிங் தேர்வு செய்தது. இதனால், பேட்டிங் களமிறங்கிய சென்னை அணி ஓப்பனர் உத்தப்பா, தொடக்கம் முதலே அதிரடி காட்டினார். முதல் இன்னிங்ஸ் இன்னும் நடைபெற்று வரும் நிலையில், 8 பவுண்டரிகள், 1 சிக்சர் என அதிரடி காட்டிய அவர் 26 பந்துகளில் அரை சதம் கடந்து அவுட்டாகி இருக்கிறார். அதிரடியாக தொடங்கி இருக்கும் சென்னை அணி, சிறப்பான ஸ்கோரை எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. உத்தப்பாவின் ஓப்பனிங் ஆட்டம் சிறப்பாக அமைந்திருப்பதால், டுப்ளிசியின் இடத்தை அவர் பூர்த்தி செய்துவிட்டார் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.










இந்த சீசனில் இன்னும் இரு அணிகளும் முதல் வெற்றியைப் பதிவு செய்யாத நிலையில், இலக்கை எட்ட லக்னோ அணியும், கட்டுப்படுத்தும் முனைப்பில் சென்னை அணியும் போரடும் என தெரிகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண