2022 ஐபிஎல் தொடர் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் தோனி தவிர மற்ற வீரர்கள் பேட்டிங்களில் சற்று சொதப்பினர். இதனால் இரண்டாவது போட்டிக்கு முன்பாக சென்னை அணி பேட்டிங்கை சரி செய்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய இரண்டாவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை இன்று மாலை 7.30 மணிக்கு எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் மொயின் அலி பங்கேற்பார் என தெரிகிறது. முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியதால், அடுத்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் சென்னை அணி வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 






முன்னதாக அவர் இந்தியாவிற்கு வர விசா கிடைக்க தாமதமானது. இதன்காரணமாக அவர் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு இந்தியாவிற்கு வந்தார். அதைத் தொடர்ந்து அவர் மூன்று நாள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். அதனை அடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முடிந்து சென்னை அணியின் பயோ பபுளில் இணைந்துள்ளார். இவர் மிகவும் தாமதமாக வந்ததால் சென்னை அணியின் முதல் போட்டியில் இவர் இடம்பெறவில்லை. இவர் அணியில் இடம்பெறாதது சென்னை அணியின் பேட்டிங்கிற்கு சற்று பலம் குறைந்ததாக கருதப்பட்டது. ஆகவே இரண்டாவது போட்டியில் மொயின் அலி அணிக்கு திரும்பும் பட்சத்தில் சென்னை அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு கூடுதல் பலமாகும் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய மிட்சல் சாண்ட்னருக்கு பதிலாக மொயின் அலி இந்த போட்டியில் பங்கேற்பார் என தெரிகிறது.


இன்றையப் போட்டியில் பங்கேற்க இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச அணி விவரம்:


ருதுராஜ், டெவன் கான்வே, உத்தப்பா, மொயின் அலி, ராயுடு, ஜடேஜா, தோனி, பிராவோ, ஹங்கரேக்கர், துஷார், ஆடம் மில்னே 


லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் உத்தேச அணி:


ராகுல், டி காக், எவின் லூயிஸ், மணிஷ் பாண்டே, தீபக் ஹூடா, க்ருணால் பாண்டியா, மோஹ்சின் கான், ஆயுஷ் படோனி, துஷ்மந்தா சமீரா, ரவி பிஷ்னாய், ஆவேஷ் கான்




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண