கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டி வரும் மார்ச் 26-ஆம் தேதி சனிக்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கடந்த தொடரில் இரண்டாம் இடம் பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.


ஐபிஎல் தொடரைப் போல உலகெங்கிலும் வெவ்வேறு நாடுகளில் கிரிக்கெட் லீக் தொடர்கள் நடைபெற்று வருகிறது. அதில் ஐபிஎல் மிகவும் பிரபலான லீக். ஐபிஎல் தொடருக்கென தனி ரசிகர் கூட்டம் உண்டு. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் உத்தப்பா ஐபிஎல் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.


இந்த ஆண்டு தொடக்கத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் நடைபெற்று முடிந்தது. அதனை அடுத்து ஐபிஎல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர், ”ஐபிஎல் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பிஎஸ்எல் 2016-ம் ஆண்டுதான் தொடங்கப்பட்டது. இதனால், இரண்டையும் ஒப்பிட முடியாது. எனினும், மற்ற நாடுகளில் டி20 தொடர்கள் நடைபெறாத ஒரு சமயத்தில் ஐபிஎல் தொடங்கப்பட்டது. ஆனால், மற்ற நாடுகள் லீக் தொடர்களை நடத்தி வருவதற்கு மத்தியில் தொடங்கப்பட்ட பிஎஸ்எல் குறைந்த காலத்தில் மக்களின் வரவேற்பை பெற்றிருக்கிறது என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்” என தெரிவித்திருக்கிறார்






பாகிஸ்தான் பத்திரிக்கையாளரின் கருத்துக்கு எதிர் கருத்து தெரிவித்திருக்கும் உத்தப்பா, “ஐபிஎல்தான் இந்த டி20 மார்க்கெட்டை உருவாக்கியது” என கமெண்ட் செய்திருக்கிறார். வழக்கம் போல, இந்த ட்வீட் பதிவிலும் இந்தியா - பாகிஸ்தான் மோதல் எட்டிப்பார்த்திருக்கிறது. 


2022 ஐபிஎல் தொடரில், இம்முறை 8 அணிகளுடன் கூடுதலாக 2 அணிகள் என மொத்தம் 10 அணிகள் பங்கேற்க இருப்பதால், மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. அதனை அடுத்து, ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் விளையாடும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண