2022-ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் 26-ம் தேதி மும்பையில் தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. ஐபிஎல் போட்டிகள் தொடங்க இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
முதலாவது ஐபிஎல் தொடர் வரை 2021-ம் ஆண்டு ஐபிஎல் தொடர் வரை மகேந்திர சிங் தோனி அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் விளையாடியுள்ளார். இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் தோனியின் தலைமையின் கீழ் விளையாட இருக்கும் சென்னை அணி சூரத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டிருக்கிறது. தீவிரமாக பயிற்சி எடுத்து கொள்ளும் வீரர்கள், இந்த முறையும் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குவார்கள் என தெரிகிறது. இந்நிலையில், பயிற்சி களத்தில் தோனி பேட்டிங் செய்வது போன்ற வீடியோவை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
வீடியோவைக் காண:
சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் போட்டிகளின் அட்டவனை விபரம் இதோ:
தேதி | போட்டி | நேரம் | இடம் |
26.03.2022 | CSK vs KKR | மாலை 7.30 | மும்பை வான்கடே மைதானம் |
31.03.2022 | LSG vs CSK | மாலை 7.30 | மும்பை சிசிஐ மைதானம் |
03.04.2022 | CSK vs PBKS | மாலை 7.30 | மும்பை சிசிஐ மைதானம் |
09.04.2022 | CSK vs SRH | மதியம் 3.30 | மும்பை டி.ஒய் படீல் மைதானம் |
12.04.2022 | CSK vs RCB | மாலை 7.30 | மும்பை டி.ஒய் படீல் மைதானம் |
17.04.2022 | GT vs CSK | மாலை 7.30 | பூனே எம்.சி.ஏ மைதானம் |
21.04.2022 | MI vs CSK | மாலை 7.30 | மும்பை டி.ஒய் படீல் மைதானம் |
25.04.2022 | PBKS vs CSK | மாலை 7.30 | மும்பை வான்கடே மைதானம் |
01.05.2022 | SRH vs CSK | மாலை 7.30 | பூனே எம்.சி.ஏ மைதானம் |
04.05.2022 | RCB vs CSK | மாலை 7.30 | பூனே எம்.சி.ஏ மைதானம் |
08.05.2022 | CSK vs DC | மாலை 7.30 | மும்பை டி.ஒய் படீல் மைதானம் |
12.05.2022 | CSK vs MI | மாலை 7.30 | மும்பை வான்கடே மைதானம் |
15.05.2022 | CSK vs GT | மதியம் 3.30 | மும்பை வான்கடே மைதானம் |
20.05.2022 | RR vs CSK | மாலை 7.30 | மும்பை சிசிஐ மைதானம் |
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்