ஐபிஎல் தொடரின் 43வது போட்டியில் நேற்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. 


அடுத்து களமிறங்கிய லக்னோ அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. போட்டிக்கு பிறகு இரு அணி வீரர்களும் கைகுலுக்கி கொண்டபோது, லக்னோ வீரர் நவீன் உல் ஹக், விராட் கோலியுடம் ஏதோ சொல்ல இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடந்து, லக்னோ அணியின் ஆலோசகர் காம்பீரும் உள்ளே வர, விராட் கோலியும் வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கினார். 


என் காலுக்கு கீழ்தான் நீ : 


லக்னோ 127 ரன்களை நோக்கி பேட்டிங் செய்தபோது விக்கெட்கள் சரிந்தது. அப்போது 10வது இடத்தில் நவீன் உல் ஹக் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். விரைவில் விக்கெட்களை எடுக்க விராட் கோலி, நவீனிடம் ஏதோ ஸ்லட்ஜிங் செய்தாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நவீன் விராட் கோலியிடம் சண்டைக்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில் நடுவர்கள் இருவரை தடுக்க, விராட் கோலி அவரது கால்களை காமித்து நவீனை ஏதோ சொல்லிருக்கிறார். இன்னும் நவீன் டென்ஷாகியுள்ளார். 










இதையடுத்து போட்டிக்கு பிறகு விராட் கோலி, நவீனிடம் சொன்ன வார்த்தை இதுதான் என்று நவீன் உல் ஹக் போஸ்ட் செய்ததாக ஒரு பதிவு வைரலானது. அதில் , “ அறிவுரைகளை ஏற்கவும் மரியாதை கொடுக்கவும் எப்போதும் நான் தயார். கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் விளையாட்டு. ஆனால் நீங்கள் அனைவரும் எங்கள் காலடியில் இருக்கிறீர்கள் என்று யாராவது சொன்னால் அவர் என்னைப் பற்றி மட்டும் பேசவில்லை, என் மக்களை பற்றி பேசுகிறார் என்று அர்த்தம்” என குறிப்பிட்டிருந்தார். 






ஆனால், இந்த பதிவு சித்தரிக்கப்பட்டது. இப்படியான ஒரு பதிவை நவீன் பதிவிடவில்லை என கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், இணையத்தில் வைரலான ஒரு வீடியோவில் விராட் கோலி தனது காலில் உள்ள ஷூவை காமித்து நவீனிடன் ஏதோ காட்டி சொல்கிறார். அதற்கு நவீனும் கோவப்படுகிறார். 


இந்தநிலையில் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டார். அதில், “நீங்கள் பார்ப்பது மற்றும் கேட்பது எதுவும் உண்மை இல்லை” என குறிப்பிட்டு இருந்தார். தற்போது வரை எது உண்மை எது பொய் என்று தெரியவில்லை. 






ஆனால் ஐபிஎல் நடத்தை மீறியதாக விராட் கோலி (1.07 கோடி) மற்றும் கவுதம் காம்பீருக்கு (25 லட்சம்) 100 சதவீதம் போட்டி கட்டணத்தில் இருந்து அபராதமும், நவீன் உல் ஹக்கிற்கு (1.79 லட்சம்) 50 சதவீத அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.