IPL 2023, GT vs DC: சொந்த மைதானத்தில் குஜராத்.. பழிதீர்க்க களமிறங்கும் டெல்லி.. இன்றைய ஆட்டம் யாருக்கு சாதகம்?

ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் ஆட்டத்தில் குஜராத் - டெல்லி அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றது. 

Continues below advertisement

ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் ஆட்டத்தில் குஜராத் - டெல்லி அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றது. 

Continues below advertisement

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 31 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. ஒரு மாதத்தை கடந்து விட்ட நிலையில், ஏறக்குறைய அனைத்து அணிகளும் தங்களது முதல் பாதி போட்டிகளில் விளையாடி விட்டது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த ஐபிஎல் தொடரில் எந்த அணி பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்யும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

இந்த நிலையில் 44வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.  இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில்  முதல் இடத்தில் உள்ளது. அதேசமயம் டெல்லி அணி 8 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 6 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 

குஜராத் அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கு ஏறக்குறைய உறுதியாகி விட்ட நிலையில், டெல்லி அணிக்கு இனி வரும் ஒவ்வொரு போட்டியும் வாழ்வா? சாவா? நிலை தான். அந்த அணி எஞ்சிய 6 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் கனவை நினைத்து பார்க்க முடியும். இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டிகள் ஜியோ சினிமா செயலியிலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும் ஒளிபரப்படுகிறது. 

இரு அணிகளிலும் பிளேயிங் லெவன் 

குஜராத் டைட்டன்ஸ்

 சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா(கேப்டன்) , டேவிட் மில்லர் , விஜய் ஷங்கர் , ராகுல் திவாடியா , விருத்திமான் சஹா(விக்கெட் கீப்பர்) , ரஷித் கான் ,  முகம்மது ஷமி , ஜோஸ்வா லிட்டில் , மோகித் ஷர்மா , நூர் அகமது

டெல்லி கேபிடல்ஸ்

டேவிட் வார்னர், பிலிப் சல்ட், மிட்செல் மார்ஷ், மணிஷ் பாண்டே, பிரியம் கார்க், அக்‌ஷர் படேல், ரிபால் படேல், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, இஷாந்த் சர்மா, முகேஷ் குமார் 

ஆட்டத்தை மாற்றப்போகும் வீரர்கள் (impact players) யார்? 

குஜராத் அணியில் கே.எஸ்.பாரத், சாய் சுதர்சன், சிவம் மாவி, ஜெயந்த் யாதவ் ஆகியோரும், டெல்லி அணியில் பிருத்வி ஷா, லலித் யாதவ், பிரவீன் துபே, சேத்தன் சகாரியா ஆகியோரும் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதுவரை நடந்தது என்ன? 

குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இதுவரை 2 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. கடந்தாண்டு நடந்த போட்டியிலும், நடப்பு சீசனில் டெல்லியில் நடந்த போட்டியிலும் குஜராத் அணியே வெற்றி பெற்றது. இதனால் இன்று நடக்கும் ஆட்டத்தில் டெல்லி வெற்றி பெற்று  குஜராத் அணியை பழிதீர்க்க முயலும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் சொந்த மைதானத்தில் களமிறங்குவது குஜராத் அணிக்கு சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola