Jadeja Hugs Wife: சென்னைக்காக மனைவி சொன்னதை செய்த ஜடேஜா..! மைதானத்திலேயே கட்டி அணைத்த காதல் ஜோடி

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிபோட்டியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, தனது மனைவியை இறுக்கி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Continues below advertisement

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிபோட்டியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, தனது மனைவியை இறுக்கி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Continues below advertisement

சென்னை அணி அபார வெற்றி:

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடந்து முடிந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 214 ரன்களை குவித்தது. போட்டியின் இடையே மழை குறுக்கிட்டதால், சென்னை அணிக்கு 15 ஓவர்களில் 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து, கடைசி ஓவரின் இரண்டு பந்துகளில் சென்னை அணி வெற்றி பெற,  10 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் இருந்த ஜடேஜா முதல் பந்தை சிக்சருக்கும், அடுத்த பந்தை பவுண்டரிக்கும் விரட்டி கடைசி பந்தில் சென்னைக்கு வெற்றியை பெற்று தந்தார். இந்த த்ரில் வெற்றி மூலம், 5வது முறையாக சென்னை அணி கோப்பையை கைப்பற்றி அசத்தியது. 

மகிழ்ச்சி கடலில் ஜடேஜா:

இந்த வெற்றியை தொடர்ந்து சென்னை வீரர்கள் அனைவரும் மைதானத்திலேயே மகிழ்ச்சி கடலில் மூழ்கினர். குறிப்பாக சென்னை அணியின் வெற்றிக்கு வித்திட்ட ஜடேஜா, போட்டியை காண மைதானத்திற்கு வந்திருந்த தனது மனைவியும், பாஜக எம்.எல்.ஏவுமான ரிவாபா ஜடேஜாவை இறுக்கி அணைத்து உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் மல்க தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிறது.

ஜடேஜா - ரசிகர்கள் சர்ச்சை:

நடப்பு தொடரில் தோனியின் பேட்டிங்கை காண வேண்டும் என்பதற்காக, அவருக்கு முன்னதாக களமிறங்கும் ஜடேஜாவை விரைவில் அவுட் ஆகுமாறு, மைதானத்திற்கு வந்திருந்த ரசிகர்கள் முழக்கமிட்டனர். இதுகுறித்து தனது கவலையை வெளிப்படையாகவே அவர் தெரிவித்து இருந்தார். ஆனாலும், ரசிகர்கள் தொடர்ந்து அவரை காயப்படுத்தும் விதமாக செயல்பட, டிவிட்டரில் சில கருத்துகளையும் பகிர்ந்தார். அப்போது, உங்களது வெற்றி மட்டுமே உரக்க பேச வேண்டும் என, ஜடேஜாவின் மனைவி டிவிட்டரில் ஆறுதல் கூறி இருந்தார்.  அதை உறுதிப்படுத்தும் விதமாக நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்தார். 

கடந்த 2012ம் ஆண்டு முதல் சென்னை அணிக்காக விளையாடி வரும் ஜடேஜா, பேட்டிங், பீல்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு, அணியின் முக்கிய ஆல்ரவுண்டராக விளங்கி வருகிறார். நடப்பு தொடரில் 16 போட்டிகளில் விளையாடிய ஜடேஜா, 175 ரன்களையும், 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார். 

Continues below advertisement