முதல் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஏலம் லீக்கின் மிகவும் அடையாளம் காணக்கூடிய பல அம்சங்களுக்கு அடித்தளம் அமைத்தது, ஆனால் அதுவரை கிரிக்கெட் உலகில் கேள்விப்படாத ஒரு விஷயமாக அது இருந்ததால் அப்போதைய வீரர்கள் ஒரு சந்தேகப் பார்வையிலேயே அணுகினர். எந்தவொரு புதிய நிகழ்வையும் போலவே, லீக் மற்றும் குறிப்பாக ஏலத்தின் செயல்முறை ஆகியவை வீரர்களுக்கு புரியவில்லை. மேலும் இது குறித்து முதன்முதலில் கேட்டபோது எப்படி இருந்தது என்று, அந்த நேரத்தில் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவரான வீரேந்திர சேவாக் பேசியுள்ளார்.



ஐபிஎல் முதல் ஏலம்


இந்திய அணி 2007/08 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருந்தபோது முதன்முறையாக பிப்ரவரி 20, 2008 அன்று நடந்த ஏலத்தைப் பற்றி அறிந்ததாக சேவாக் தெரிவித்தார். “எங்கள் குழந்தைகள் வளர்ந்து இப்போது கிரிக்கெட் விளையாடுகிறார்கள், அதனால் நாங்களும் வளர்ந்துவிட்டோம் என்று உணர்கிறோம். நாங்கள் முதல் முறையாக விளக்கமளித்த நாளை என்னால் மறக்கவே முடியாது” என்று சேவாக் கூறினார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான சுனில் கவாஸ்கர் மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர்தான் முதலில் இந்த யோசனையுடன் வீரர்களை அணுகியதாக 44 வயதான சேவாக் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்: வழுக்கைதான் பிரச்சனை.. வேலையை விட்டு தூக்கிய மேனேஜர்.. வழக்கு தொடுத்த நபருக்கு நீதிமன்றம் கொடுத்த பம்பர் ஆஃபர்!


பெரும் சந்தேகம் இருந்தது


மேலும் பேசிய சேவாக், “நாங்கள் ஆஸ்திரேலியாவில் இருந்தோம். சுனில் கவாஸ்கரும், ரவி சாஸ்திரியும் எங்களை அணுகி, இந்தியன் பிரீமியர் லீக் என்ற ஒன்று நடக்கப் போகிறது என்றும், அவர்களுக்கு எங்கள் அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள். இந்த லீக் உண்மையில் வெற்றி பெறுமா இல்லையா என்று நாங்கள் யோசித்துக்கொண்டிருந்தோம். நாங்கள் எங்கள் எல்லா உரிமைகளையும் வழங்குகிறோம், ஆனால் அதற்கு எதுவும் கிடைக்காமல் போனால் என்ன செய்வது என்று கேட்டோம், ”என்று கூறினார்.



எங்களை தூக்கி வீசினார்கள்


மேலும், "ஆனால் எதிர்காலத்தில் இது மிகப் பெரிய லீக்காக மாறப் போகிறது என்பதை எங்களுக்கு புரிய வைத்தனர். இந்த லீக்கிற்கு நீங்கள் என்ன உரிமைகளை வழங்கினாலும், நீங்கள் இப்போது இருப்பதை விட அதிகமாக சம்பாதிப்பீர்கள். பணம் நிச்சயமாக ஒரு இரண்டாம் நிலை காரணியாக இருந்தாலும், புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும், அவர்கள் எங்களை தூக்கி வீசிவிட்டு முன்னாள் வருவதற்கு, இது ஒரு பெரிய தளமாக மாறும் என்று நாங்கள் அப்போது நினைக்கவில்லை" என்று சேவாக் கூறினார். 


சேவாக்கின் ஐபிஎல் கரியர்


முதல் ஐபிஎல் ஏலத்தில் சேவாக்கை இப்போது டெல்லி கேபிடல்ஸ் என்று அழைக்கப்படும் அப்போதைய 'டெல்லி டேர்டெவில்ஸ்' அணி வாங்கியது. இரண்டு சீசன்களுக்கு அணியின் கேப்டனாக இருந்த அவர், அந்த பதவியில் இருந்து விலகி கவுதம் கம்பீரிடம் ஒப்படைத்தார். சேவாக்கை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வாங்கியது, டிடியை விட்டு வெளியேறினார். அவர் கிங்ஸ் லெவன் பஞ்சாபில் இருந்தபோது அந்த அணி, 2014 இல் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு வந்தது. ஆனால் கொல்கத்தாவிடம் தோற்றது. சேவாக் தனது ஐபிஎல் வாழ்க்கையில் 104 போட்டிகளில் விளையாடி, 155.44 ஸ்ட்ரைக் ரேட்டில் 16 அரை சதங்கள் மற்றும் இரண்டு சதங்களுடன் 2728 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.