ஐ.பி.எல். 2023ம் ஆண்டுக்கான போட்டி அட்டவணை இன்று வெளியானது. வரும் மார்ச் 31-ஆம் தேதி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.


இந்த நிலையில், 52 நாட்களில் மொத்தம் 70 போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த 70 போட்டிகளும் மொத்தம் நாட்டில் உள்ள முக்கியமான 12 மைதானங்களில் நடத்தப்பட உள்ளது.  அந்த மைதானங்களின் பட்டியலை கீழே காணலாம்.



  1. அகமதாபாத்:


குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் போட்டிகள் நடைபெற உள்ளது.



  1. மொஹாலி:


பஞ்சாபில் உள்ள மொகாலியில் உள்ள மைதானம் நாட்டின் மிகவும் முக்கியமான மைதானம் ஆகும். இந்திரஜித்சிங் பிந்த்ரா மைதானம் மிகவும் புகழ்பெற்றது ஆகும்.



  1. லக்னோ:


உத்தர பிரதேசத்தில் உள்ள லக்னோவில் உள்ள பாரத்ரத்னா அடல்பிகாரி வாஜ்பாயி மைதானத்தில் லீக் ஆட்டங்கள் நடக்க உள்ளது. இந்த மைதானம் கடந்த 2017ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.



  1. ஹைதரபாத்:


தெலங்கானாவில் உள்ள ஹைதரபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானம் மிகவும் முக்கியமான மைதானம் ஆகும். இந்த மைதானத்திலும் லீக் போட்டிகள் நடைபெற உள்ளது.



  1. பெங்களூர்:


கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் பெங்களூர் அணியின் முக்கிய போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த மைதானம் நாட்டின் முக்கியமான மைதானங்களில் ஒன்றாகும்.



  1. சென்னை:


தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை அணியின் பிரதான போட்டிகள் உள்பட லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளது. தோனி தன்னுடைய கடைசிய ஐ.பி.எல். போட்டி சென்னையில்தான் இருக்கும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.



  1. டெல்லி:


நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் டெல்லி அணி மோதும் லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளது.



  1. கொல்கத்தா:


மேற்கு வங்காள தலைநகரான கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற ஈடன்கார்டன் மைதானத்தில் முன்னாள் சாம்பியனான கொல்கத்தா அணிகள மோதும் முக்கிய ஆட்டங்கள் நடைபெற உள்ளது.



  1. ஜெய்ப்பூர்:


ராஜஸ்தான் தலைநகரான ஜெய்ப்பூரில் உள்ள சாவாய் மன்சிங் ஸ்டேடியத்தில் ஐ.பி.எல். கோப்பையை முதன்முதலாக கைப்பற்றிய ராஜஸ்தான் அணியின் லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது.



  1. மும்பை:


ஐ.பி.எல். கோப்பையை அதிக முறை கைப்பற்றிய அணி என்ற பெருமையை பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் சொந்த மைதானமான மும்பையில் உள்ள வான்கடே மைதானத்திலும், நவி மும்பையில் உள்ள டி.ஒய், பாட்டீலும், ப்ராபோர்ன் மைதானத்திலும் போட்டிகள் நடக்க வாய்ப்புள்ளது.



  1. கவுஹாத்தி:


அசாமில் உள்ள கவுகாத்தியின் பார்சபரா மைதானத்தில் லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளது. இந்த மைதானம் 2012ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிது.



  1. தரம்சாலா:


ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள தரம்சாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் சில ஐ.பி.எல். போட்டிகள் நடத்தப்பட உள்ளன.


மேற்கண்ட மைதானங்களில் குவாலிபையர் ஆட்டங்கள், எலிமினேட் போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டிகள் நடைபெற உள்ளது.