மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா நேற்றைய போட்டியில் பஞ்சாப்க்கு எதிராக டக் அவுட் ஆனார். இதனை கிண்டல் செய்யும் விதமாக பஞ்சாப் அணி ரோகித் டக் அவுட் என்பதைப் போல் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தது. இதற்கு உடனடியாக மும்பை இந்தியன்ஸ் அணி பதிலடி கொடுத்தது. அதாவது மும்பை இந்தியன்ஸ் அணியின் பதிலடியில், ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் 6 கோப்பைகளை வென்றுள்ளார். அதாவது ரோகித் சர்மா வீரராக இருந்த போது டெக்கான் சார்ஜஸ் அணி ஒரு முறையும் மும்பை அணியின் கேப்டனாக 5 முறையும் கோப்பையை வென்றுள்ளார். ஆனால் பஞ்சாப் அணியிடம் ஒரு கோப்பை கூட இல்லை, பஞ்சாப் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியாக இருந்த போதும், பஞ்சாப் கிங்ஸாக இருக்கும் போதும் கூட ஒரு கோப்பையை கூட வென்றதில்லை என பதிலடி கொடுத்துள்ளது.
இந்த பதிவிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் காமெடி காட்சியின் டெம்ப்ளேட்டை பதிவிட்டுள்ளது. அதில் “என்னடா பொசுக்குக்குனு இப்படி சொல்லிப்புட்ட” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த டிவிட்டர் பதிவு வைரலானதைத் தொடர்ந்து பஞ்சாப் அணி தனது டிவிட்டர் பதிவை நீக்கியுள்ளது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தங்களது பதிவை இன்னும் நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் மும்பை அணிகள் சரி பலம் கொண்ட போட்டியாளர்களாக பார்க்கப்படும் நிலையில், மும்பை அணியின் கேப்டன் ரோகித்தை பஞ்சாப் அணி சீண்டிய நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் அணியை கிண்டல் செய்யும் விதமாக பதிவிட்டுள்ளது. இதனை சென்னை மற்றும் மும்பை அணிகளின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மொஹாலி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணி நிர்ணயித்த 215 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணிக்கு ஆரம்பமே சறுக்கலாக அமைந்தது. மும்பை அணி கேபன் ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
கேமரூன் கிரீன் - இஷான் கிஷன் கூட்டணி:
இரண்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த கேமரூன் கிரீன் மற்றும் இஷான் கிஷன் கூட்டணி பொறுப்புடன் விளையாடி மும்பை அணியை சரிவிலிருந்து மீட்டது. சீரான இடைவெளியில் சிக்சர் மற்றும் பவுண்டரிகலை விலாசினர். இதனால், 54 ரன்கலை சேர்த்தது. தொடர்ந்து, 23 ரன்கள் சேர்த்து இருந்தபோது கேமரூன் கிரீன் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இஷான் கிஷன் - சூர்யகுமார் யாதவ் கூட்டணி:
இதையடுத்து வந்த சூர்யகுமார் யாதவும், இஷான் கிஷன் உடன் சேர்ந்து சிரப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அடுத்தடுத்து பவ்யுண்டரிகளை விளாச 29 பந்துகளில் இஷான் கிஷான் நடப்பு தொடரில் தனது இரண்டாவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் மும்பை அணியும் 100 ரன்களை கடந்தது. மறுமுனையில் நாலாபுறமும் சிக்சர்களாக விளாசிய சூர்யகுமார் யாதவ் வெறும் 23 பந்துகளில் 50 ரன்களை கடந்து மிரட்டினார். இந்த கூட்டணி வெறும் 52 பந்துகளில் 100 ரன்களை சேர்த்தது.
சூர்யா & இஷான் அவுட்:
பஞ்சாப் அணிக்கு பெரும் தலைவலியை கொடுத்த சூர்யகுமார் யாதவ் 66 ரன்களை சேர்த்து இருந்தபோது ஆட்டமிழந்தார். வெறும் 31 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர், 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களை விளாசி அசத்தினார். அவரைதொடர்ந்து 75 ரன்கள் சேர்த்து இருந்தபோது இஷன் கிஷனும் ஆட்டமிழந்தார். 41 பந்துகளை எதிர்கொண்ட அவர், 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களை விளாசினார்.
திலக் வர்மா அதிரடி;
இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய திலக் வர்மா அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசினார். அவறுக்கு துணையாக டிம் டேவிட்டும் அதிரடி காட்டினார்.
மும்பை வெற்றி:
இறுதியில் 18.5 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது மும்பை அணி. இதன் மூலம் நடப்பு தொடரில் ஏற்கனவே பெற்ற தோல்விக்கு, பஞ்சாப் அணியை பழிதீர்த்தது மும்பை அணி. கடந்த முறை மும்பை அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங், இந்த போட்டியில் தான் வீசிய 4 ஓவர்களில் 66 ரன்களை வாரிக்கொடுத்தார்.