இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கியது முதல் பல்வேறு சாதனைகள் முறியடிக்கப்பட்டு புதிய சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றது. அதில் ஒரு சாதனை பஞ்சாப் அணி படைத்துள்ளது. ஆமாம் இந்த ஆண்டு மிகவும் பலமான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ள அணிகளில் பஞ்சாப் அணியும் ஒன்று. மிகவும் பலமான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணி இம்முறை ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு புதிய வரலாற்றையே படைத்துள்ளது. 


தொடர்ந்து 4 முறை:


அதாவது பஞ்சாப் கிங்ஸ் அணி ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து 4 முறை 200 ரன்களுக்கு மேல், குவித்துள்ளது. அதாவது பஞ்சாப் அணி கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில்  மும்பை அணிக்கு எதிரான போட்டியில், 214 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் மும்பை அணி வெற்றி இலக்கை எட்டாததால் பஞ்சாப் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பின்னர், லக்னோ அணியுடனான போட்டியில், பஞ்சாப் அணி தோல்வியைத் தழுவியது. அதாவது அந்த போட்டியில் லக்னோ அணி ருத்ரதாண்டவ ஆட்டத்தினால், பஞ்சாப் அணிக்கு 258 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்தது. ஆனால், பஞ்சாப் அணி வெற்றி இலக்கை எட்டமுடியவில்லை என்றாலும், 20 ஓவர்கள் முடிவில் 2012 ரன்கள் குவித்தது. 


அதன் பின்னர் சென்னை அணியுடனான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி இலக்கான 201 ரன்னை போட்டியின் கடைசி பந்தில் எட்டியது. அதன் பின்னர் நேற்று அதாவது மே மாதம் 3ஆம் தேதி, மொகாலியில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணி மும்பை அணிக்கு வான்கடே போட்டியைப் போல், 215 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்தது. ஆனால் இந்த போட்டியில் மும்பை அணி அதிரடியாக விளையாடி 18.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. இதனால் இந்த போட்டியில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. 


புதிய வரலாறு:


ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு அணி தொடர்ந்து நான்கு போட்டிகளில் 200 ரன்களுக்கு மேல் குவிப்பது இதுதான் முதல்முறை. இதில் பஞ்சாப் அணி 2  போட்டிகாளில் வெற்றியும் 2 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது. அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஒரு சாதனையைப் படைத்துள்ளது. அதாவது, மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து இரண்டு போட்டிகளில் 200 ரன்களுக்கு மேல் சேஸ் செய்து வெற்றி பெற்றுள்ளது.


ராஜஸ்தானில் நடைபெற்ற போட்டியில்  மும்பை அணி ராஜஸ்தான் நிர்ணயம் செய்த 213 ரன்கள் இலக்கை 19.3 ஓவர்களில் எட்டி 6 விக்கெடுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேபோல், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், 215 ரன்கள் இலக்கை 18.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி இந்த போட்டியையும் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதனால் ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் 200 ரன்களுக்கு மேல் சேஸ் செய்து வெற்றியும் பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.