இரண்டு வீரர்களின் ஒரே பெயர்.. ஒரே அடிப்படை விலை. இதுவே ஐபிஎல் 2024 ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய சிக்கலை கொடுத்துள்ளது. கடந்த 19ம் தேதி நடந்த ஏலத்தின் போது, வாங்க விரும்பாத ஒரு வீரரை பஞ்சாப் கிங்ஸ் வாங்கியது. அந்த வீரர்களின் பெயர் ஷஷாங்க் சிங். இந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக எந்த ஷஷாங்க் கிங் விளையாடுவார் என்பதுதான் கேள்வியாக உள்ளது. 


என்ன நடந்தது..?


கடந்த 19ம் தேதி பஞ்சாப் கிங்ஸ் ஆல்-ரவுண்டர் ஷஷாங்க் சிங்கை ரூ.20 லட்சம் அடிப்படை விலையில் வாங்கியது. அப்போது, அறிவிக்கப்பட்ட வீரரின் வயது 32. ஆனால், பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்க நினைத்தது 19 வயதுடைய ஷஷாங்க் சிங். இந்த குழப்பத்திற்கு காரணம், இரு வீரர்களில் பெயர்களும் ஒரே மாதிரியாக இருப்பதுடன், அவர்களில் அடிப்படை விலையும் ஒன்றாக இருந்தது. ஏலத்தின்போது, பஞ்சாப் அணியின் பயிற்சியாளர்கள் சஞ்சய் பங்கர் மற்றும் ட்ரெவர் பெய்லிஸ், அணி உரிமையாளர்கள் நெஸ் வாடியா மற்றும் ப்ரீத்தி ஜிந்தா ஆகியோர் இருந்தனர். 32 வயதான ஷஷாங்க் சிங்கின் பெயர் ஏலத்திற்கு வந்தபோது, ​​பஞ்சாப் கிங்ஸ் மட்டுமே பந்தயத்தில் இறங்கியது.  இந்த காரணத்திற்காக, 32 வயதான ஷஷாங்க் சிங் பஞ்சாப் அணிக்கு அடிப்படை விலையான ரூ.20 லட்சத்தில் ஏலம் எடுக்கப்பட்டார். 






அதன் பிறகு ஏலத்தில் ஈடுபட்ட மல்லிகா சாகர் அடுத்த வீரரின் பெயரான தியாகராஜனை அறிவித்தார். அப்போது, பஞ்சாப் கிங்ஸ் உரிமையாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தங்களது தவறை உணர்ந்தனர். மேலும் வீரர்களைத் திருப்பித் தருமாறும், பணத்தை அணியின் பணப்பையில் மீண்டும் வைக்குமாறும் கோரிக்கை வைத்தனர். ஆனால் அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஐபிஎல் விதிகளை மேற்கோள் காட்டி ஏலதாரர் மல்லிகா சாகர்,  ஷஷாங்க் சிங்கின் ஏலத்தை பஞ்சாப் மட்டுமே எடுத்துள்ளது. இதன் காரணமாகவே ஏலத்தை திரும்பப்பெற முடியாது என கூறினார். இதன் விளைவாக பஞ்சாப் கிங்ஸ் விரும்பாவிட்டாலும் ஷஷாங்க் சிங்கை அணியில் சேர்க்க வேண்டியதாயிற்று.


ஏலத்தில் எடுக்கப்பட்ட ஷஷாங்க் சிங் யார்?


பஞ்சாப் அணியில் எடுக்கப்பட்ட 32 வயதான ஷஷாங்க் சிங், நவம்பர் 21, 1991 இல் பிறந்தார். முன்னதாக ஐபிஎல்லில் பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகளில் இடம்பிடித்துள்ளார். ஆனால், அவருக்கு பஞ்சாப் அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 10 ஐபிஎல் போட்டிகளில் விளையாடினார். அதில் அவர் 17.25 சராசரியில் 69 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். பேட்டிங்குடன், ஷஷாங்க் மிதவேகமாக பந்துவீசுவார் என்றும் கூறப்படுகிறது.


ஐபிஎல் 2024க்கான பஞ்சாப் கிங்ஸ் அணி:


ஷிகர் தவான் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், லியாம் லிவிங்ஸ்டன், ரிலே ரூசோ, ஜிதேஷ் சர்மா, அதர்வா டெய்டே, அர்ஷ்தீப் சிங், ரிஷி தவான், பிரப்சிம்ரன் சிங், சாம் குர்ரான், சிக்கந்தர் ராசா, ஹர்பிரீத் ப்ரார், ராகுல் சாஹர், ககிசோ ரபாடா, நாதன் எலிஸ், நாதன் எலிஸ் ., ஹர்ப்ரீத் பாட்டியா, ஹர்ஷல் படேல், கிறிஸ் வோக்ஸ், அசுதோஷ் சர்மா, விஸ்வநாத் பிரதாப் சிங், ஷஷாங்க் சிங், பிரின்ஸ் சவுத்ரி, தனய் தியாகராஜ் மற்றும் வித்வத் கவேரப்பா.