ஐபிஎல் தொடரின் நேற்றைய 59வது போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி டெல்லி அணியை வீழ்த்தியது. இதன்மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் டெல்லி கேபிடல்ஸின் நம்பிக்கையை பஞ்சாப் கிங்ஸ் தகர்த்தது. பிரப்சிம்ரன் சிங் டெல்லி அணிக்கு எதிராக ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 


டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. அதன்பிறகு இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக கேப்டன் டேவிட் வார்னர் 27 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்தார். 


பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஹர்பிரீத் ப்ரார் நான்கு விக்கெட்டுகளையும், ராகுல் சாஹர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தனர். 


புள்ளிகள் பட்டியலில் தற்போது பஞ்சாப் அணி 6 வெற்றிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணி 4 வெற்றி மட்டுமே பெற்று கடைசி இடத்திலுள்ளது.


இந்தநிலையில், எந்தெந்த அணி எந்தெந்த இடங்களில் உள்ளது என்ற பட்டியலை கீழே பார்க்கலாம். 



  1. குஜராத் டைட்டன்ஸ்:  12 போட்டிகள் - 8 வெற்றி

  2. சென்னை சூப்பர் கிங்ஸ்: 12 போட்டிகள்- 7 வெற்றி

  3. மும்பை இந்தியன்ஸ்: 12 போட்டிகள் - 7 வெற்றி

  4. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: 12 போட்டிகள்- 6 வெற்றி

  5. ராஜஸ்தான் ராயல்ஸ்: 12 போட்டிகள்- 6 வெற்றி

  6. பஞ்சாப் கிங்ஸ்: 12 போட்டிகள் - 6 வெற்றி

  7. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: 11 போட்டிகள் - 5 வெற்றி

  8. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: 12 போட்டிகள் - 5 வெற்றி

  9. சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: 11 போட்டிகள் - 4 வெற்றி

  10. டெல்லி கேபிடல்ஸ்: 12 போட்டிகள் - 4 வெற்றி


ஆரஞ்சு கேப்: 


டெல்லி மற்றும் பஞ்சாப் போட்டிக்கு பிறகு ஆரஞ்சு கேப் பட்டியலில் முதல் 10 இடங்களுக்கு நுழைந்தார். வழக்கம்போல், பாப் டு பிளெசிஸ் முதல் இடத்திலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றனர். 



  1. (ஆர்சிபி) ஃபாஃப் டு பிளெசிஸ் - 576 ரன்கள் (11 போட்டிகள்)

  2. (ஆர்ஆர்) யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 575 ரன்கள் (12 போட்டிகள்)

  3. (எம்ஐ) சூர்யகுமார் யாதவ் - 479 ரன்கள் (12 போட்டிகள்)

  4. (ஜிடி) ஷுப்மான் கில் - 475 ரன்கள் (12 போட்டிகள்)

  5. (சிஎஸ்கே) டெவோன் கான்வே - 468 ரன்கள் (12 போட்டிகள்)


பர்பிள் கேப்:


பஞ்சாப் கிங்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 12 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி எட்டாவது இடத்தில் நீடிக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு ரஷித் கான் 12 இன்னிங்ஸ்களில் 23 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். 



  1. (ஜிடி) ரஷித் கான் - 23 விக்கெட்டுகள் (12 போட்டிகள்)

  2. (ஆர்ஆர்) யுஸ்வேந்திர சாஹல் - 21 விக்கெட்டுகள் (12 போட்டிகள்)

  3. (எம்ஐ) பியூஷ் சாவ்லா - 19 விக்கெட்டுகள் (12 போட்டிகள்)

  4. (ஜிடி) முகமது ஷமி - 19 விக்கெட்டுகள் (12 போட்டிகள்)

  5. (சிஎஸ்கே) துஷார் தேஷ்பாண்டே - 19 விக்கெட்டுகள் (12 போட்டிகள்)