ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நேற்று இரவு நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடைசி பந்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. 


கடைசி பந்தில் ஹைதராபாத் அணிக்கு 5 ரன்கள் தேவை என்ற நிலையில், சமத் தூக்கி அடித்த பந்து கேட்சானது. அப்போது  ராஜஸ்தான் கிட்டத்தட்ட வெற்றி பெற்றது. இருப்பினும், அந்த பந்து நடுவரால் நோ-பால் என அறிவிக்கப்பட்டது, அடுத்த பந்தை சமத் சிக்ஸருக்கு அடிக்க, ஹைதராபாத் இரண்டு முக்கிய புள்ளிகளை பெற்றது. 


இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இடம் மட்டுமே மாற்றமடைந்துள்ளது. தற்போது 8 புள்ளிகளுடன் ஐபிஎல் தரவரிசையில் 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மீண்டும் டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி இடத்திற்கு சென்றது. 


ஐபிஎல் 2023 புள்ளிகள் அட்டவணையில் குஜராத் டைட்டன்ஸ் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. (ஞாயிற்றுக்கிழமை) நேற்று முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிராக வென்றதன் மூலம், அந்த அணி இப்போது 16 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இதன்மூலம், கிட்டத்தட்ட பிளே ஆப் கதவுகளை குஜராத் அணி திறந்துவிட்டது. 


குஜராத் அணிக்கு அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் 13 புள்ளிகளுடனும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 11 புள்ளிகளுடனும் உள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் தலா 10 புள்ளிகளுடன் உள்ளன.


கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகள் தலா 8 புள்ளிகளுடன் கடைசி 3 இடங்களைப் பிடித்துள்ளன.


ஐபிஎல் 2023 புள்ளிகள் அட்டவணை: 



  1.  குஜராத் டைட்டன்ஸ் (16 புள்ளிகள்)

  2. சென்னை சூப்பர் கிங்ஸ் (13 புள்ளிகள்)

  3. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (10 புள்ளிகள்)

  4. ராஜஸ்தான் ராயல்ஸ் (10 புள்ளிகள்)

  5. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (10 புள்ளிகள்)

  6. மும்பை இந்தியன்ஸ் (10 புள்ளிகள்)

  7. பஞ்சாப் கிங்ஸ் (10 புள்ளிகள்)

  8. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (10 புள்ளிகள்)

  9. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (10 புள்ளிகள்)

  10. டெல்லி கேபிடல்ஸ் (10 புள்ளிகள்)


ஆரஞ்சு கேப் : 


வழக்கம்போல் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் பெங்களூர் கேப்டன் ஃபாப் டு பிளேசிஸ் 10 போட்டிகளில் விளையாடி 511 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். ராஜஸ்தான் அணியை சேர்ந்த ஜெய்ஸ்வால் 477 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும், சுப்மன் கில் 469 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர். கான்வே 458 ரன்களுடன் நான்காவது இடத்துக்கும், விராட் கோலி 419 ரன்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.


1. ஃபாப் டு பிளெசிஸ் (ஆர்சிபி) - 511 (10 போட்டிகள்)
2. ஜெய்ஸ்வால் (ஆர்ஆர்)- 477 (11 போட்டிகள்)
3. சுப்மன் கில் (ஜிடி) - 469 (11 போட்டிகள்)
4. டெவான் கான்வே (சிஎஸ்கே) - 458 (11 போட்டிகள்)
5. விராட் கோலி (ஆர்சிபி) - 419 (10 போட்டிகள்)


பர்பிள் கேப்: 


ஐபிஎல் 2023 தொடரில் அதிக விக்கெட்கள் எடுத்தவர் பட்டியலில் முகமது ஷமி 19 விக்கெட்களுடம் முதலிடத்தில் உள்ளார். தொடர்ந்து ரஷித் கான், துஷார் பாண்டே, பியூஸ் சாவ்லா அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். 


1. முகமது ஷமி (ஜிடி) - 19 (11 விக்கெட்கள்)
2. ரஷித் கான் (ஜிடி) - 19 (11 விக்கெட்கள்)
3. துஷார் பாண்டே (சிஎஸ்கே) -19 (11 விக்கெட்கள்)
4. பியூஸ் சாவ்லா (எம்ஐ) - 17 (10 போட்டிகள்)
5. அர்ஷ்தீப் சிங் (பஞ்சாப் ) - 16 (10 போட்டிகள்)