PBKS vs DC, IPL 2023 LIVE: டெல்லியிடம் வெற்றியோடு ப்ளேஆஃப் வாய்ப்பையும் தவறவிட்ட பஞ்சாப்..!
IPL 2023, Match 64, PBKS vs DC: டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.
பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 198 ரன்கள் எடுத்தது. இதனால் டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி பெற்றது.
19வது ஒவரின் முதல் பந்தில் பவுண்டரி விளாசிய சாம்கரன் அடுத்த பந்தில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.
18வது ஓவரில் லிவிங்ஸ்டன் 2 சிக்ஸர்களும் சாம் கரன் ஒரு சிக்ஸரும் விளாசினார்.
17 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தார்.
பஞ்சாப் அணியின் வீரரான ஷாரூக் கான் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
அதிரடியாக ஆடி வரும் லிவிங்ஸ்டன் 30 பந்தில் தனது அரைசதத்தினை எட்டியுள்ளார்.
அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஜிதேஷ் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
42 பந்தில் 55 ரன்கள் சேர்த்த தாய்டே ரிட்டேர்டு அவுட் செய்து வெளியேறியுள்ளார். இதனால் ஜிதேஷ் சர்மா களத்துக்கு வந்துள்ளார்.
பஞ்சாப் அணி 15 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் சேர்த்துள்ளது.
பஞ்சாப் அணியின் வெற்றிக்கு இன்னும் 36 பந்துகளில் 97 ரன்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பாக ஆடிவரும் தாய்டே தனது அரைசதம் விளாசியுள்ளார்.
பஞ்சாப் அணி 12 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்களை எட்டியுள்ளது.
டெல்லி அணி வீரர்கள் அடுத்தடுத்து கேட்சுகளை மிஸ் செய்து வருகின்றனர்.
போட்டியின் 12வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் தாய்டே பவுண்டரி விளாசி அசத்தியுள்ளார்.
10 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் சேர்த்துள்ளது.
போட்டியின் 10வது ஓவரில் லிவிங்ஸ்டன் மற்றும் தாய்டே கொடுத்த கேட்ச் வாய்ப்பினை டெல்லி அணி வீரர்கள் தவறவிட்டுள்ளனர்.
9 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 63 ரன்கள் சேர்த்துள்ளது.
214 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
அதிரடியாக ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 213 ரன்கள் சேர்த்தது.
களமிறங்கியது முதல் அதிரடியாக ஆடிவந்த ரூஸோ தனது முதல் ஐபிஎல் அரைசதத்தினை அடித்துள்ளார்.
16 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 2 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் சேர்த்துள்ளது.
அரைசதம் எட்டிய ப்ரித்வி ஷா 15வது ஓவரின் இறுதிப் பந்தில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 15 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 2 விக்கெட்டை இழந்து 148 ரன்கள் சேர்த்துள்ளது.
சிறப்பாக ஆடி வரும் ப்ரித்வி ஷா இந்த ஐபிஎல் தொடரின் தனது முதல் அரைசதத்தினை எட்டியுள்ளார்.
13 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 125 ரன்கள் சேர்த்துள்ளது.
46 ரன்னில் இருந்த வார்னர் 11வது ஓவரின் இரண்டாவது பந்தில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
சிறப்பாக ஆடிவரும் டெல்லி அணி 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 93 ரன்கள் சேர்த்துள்ளது.
10வது ஓவரின் முதல் பந்தில் வார்னர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை பஞ்சாப் அணியின் ராகுல் சஹார் தவறவிட்டார்.
சிறப்பாக விளையாடி வரும் டெல்லி அணி 9 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 83 ரன்கள் சேர்த்துள்ளது.
அதிரடியாக ஆடிவரும் டெல்லி அணி 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் எட்டியுள்ளது.
மூன்றாவது ஓவரில் இருந்து அதிரடியாக ஆடி வரும் டெல்லி அனி 5வது ஓவரின் 4வது பந்தில் 50 ரன்களை எட்டியது.
போட்டியின் 4வது ஓவரை வீசிய ரபாடா அந்த ஓவரில் மட்டும் 17 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அதனால் அந்த ஓவர் முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 35 ரன்கள் எடுத்தது.
போட்டியின் நான்காவது ஓவரின் 4வது பந்தில் வார்னர் இந்த இன்னிங்ஸின் முதல் சிக்ஸர் அடித்தார். கடந்த 10 ஆண்டுகளாக இந்த மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி அணியின் கேப்டன் வார்னர் மூன்றாவது ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் அடுத்தடுத்து பவுண்டரி விளாசி அசத்தினார்.
பஞ்சாப் அணியின் சிறந்த பந்து வீச்சினால் டெல்லி அணி நிதானமாகவே ஆடி வருகிறது. 2 ஓவர்களில் டெல்லி அணி 6 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
Background
ஐபிஎல் 2023 சீசனில் 64வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இந்த போட்டியானது தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7. 30 மணிக்கு தொடங்குகிறது.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஷிகர் தவானும், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு டேவிட் வார்னரும் தலைமை தாங்குகின்றனர். பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இன்னும் தக்க வைத்துள்ளது. இந்த அணியில் பிரப்சிம்ரன் சிங் மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோ சிறப்பாக விளையாடி அந்த அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்து வருகின்றனர்.
டெல்லி கேபிடல்ஸ் அணியை பொறுத்தவரை பிளே ஆஃப்களுக்கான பந்தயத்தில் இருந்து வெளியேறினாலும், கடந்த சில போட்டிகளில் சிறந்த பார்மில் விளையாடி வருகின்றன. இன்றைய போட்டியில் டெல்லி அணி வெற்றிபெற்றால், பஞ்சாப் அணியின் பிளே ஆஃப் கனவு கலையும்.
போட்டி விவரங்கள்:
- பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், மேட்ச் 64
- இடம்: இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியம், தர்மசாலா
- தேதி & நேரம்: புதன், மே 17, மாலை 7:30 மணி
- டெலிகாஸ்ட் & ஸ்ட்ரீமிங் விவரங்கள்: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஜியோசினிமா
பிட்ச் அறிக்கை:
தரம்சாலாவில் உள்ள பிட்ச் எப்போதும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக பிட்சாகவே பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியில் பனி முக்கிய பங்கு வகிக்க வாய்ப்புள்ளது. டாஸ் வென்ற கேப்டன் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்யலாம்.
கணிக்கப்பட்ட இரு அணிகள் விவரம்:
பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்):
பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சாம் குர்ரான், சிக்கந்தர் ராசா, ஷாருக் கான், ஹர்பிரீத் பிரார், ரிஷி தவான், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்
டெல்லி தலைநகரங்கள் (டிசி):
டேவிட் வார்னர் (கேப்டன்), பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), மிட்செல் மார்ஷ், ரிலீ ரோசோவ், மணீஷ் பாண்டே, அக்சர் படேல், பிரவீன் துபே, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, கலீல் அகமது, முகேஷ் குமார்
சிறந்த வீரர்களாக யார் இருப்பார்கள்?
டேவிட் வார்னர்:
ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு டேவிர் வார்னர் 12 போட்டிகளில் விளையாடி 384 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 5 அரைசதங்களும் அடங்கும். பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டியிலும் டேவிட் வார்னர் தனது பார்மை தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அர்ஷ்தீப் சிங்:
இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 12 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்கலை வீழ்த்தியுள்ளார். டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் இவர் யார்க்கர் பேசலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய போட்டியின் கணிப்பு : சேஸிங் செய்யும் அணி வெற்றிபெறும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -