PBKS vs DC IPL Playing XI: வெற்றி யாருக்கு? சிறந்த ப்ளேயிங் லெவனுடன் களமிறங்கும் அணிகள்.. விபரம் இதோ..!

PBKS vs DC IPL Playing XI: டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் களமிறங்கும் வீரர்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

Continues below advertisement

ஐபிஎல் 2023 சீசனில் 64வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியானது தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. 

Continues below advertisement

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஷிகர் தவானும், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு டேவிட் வார்னரும் தலைமை தாங்குகின்றனர். பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இன்னும் தக்க வைத்துள்ளது. இந்த அணியில் பிரப்சிம்ரன் சிங் மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோ சிறப்பாக விளையாடி அந்த அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்து வருகின்றனர். 

டெல்லி கேபிடல்ஸ் அணியை பொறுத்தவரை  பிளே ஆஃப்களுக்கான பந்தயத்தில் இருந்து வெளியேறினாலும், கடந்த சில போட்டிகளில் சிறந்த பார்மில் விளையாடி வருகின்றன. இன்றைய போட்டியில் டெல்லி அணி வெற்றிபெற்றால், பஞ்சாப் அணியின் பிளே ஆஃப் கனவு கலையும். 

பஞ்சாப்பின் ப்ளேஆஃப் வாய்ப்பு: 

இன்னும் மீதமுள்ள இரண்டு போட்டிகளில் (டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ்) வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும். அதேபோல், பெங்களூரு அணி தனக்கு மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் (ஹைதராபாத் மற்றும் குஜராத்) தோல்வியைச் சந்திக்க வேண்டும். மும்பை அணி தனக்கு மீதமுள்ள ஒரு போட்டியிலும் தோல்வியைச் சந்தித்து ரன்ரேட்டில் பஞ்சாப் அணியை விட கீழே செல்ல வேண்டும். கொல்கத்தா அணி லக்னோவுக்கு எதிரான போட்டியில் தோல்வியைச் சந்தித்தால் பஞ்சாப் அணியால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். 

டெல்லி கேப்பிட்டல்ஸ் பிளேயிங் லெவன்: 

டேவிட் வார்னர் (கேப்டன்), பிரித்வி ஷா, பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), ரிலீ ரோசோவ், அக்சர் படேல், அமன் ஹக்கிம் கான், யாஷ் துல், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, இஷாந்த் சர்மா, கலீல் அகமது

பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவன்:

ஷிகர் தவான்(கேப்டன்), அதர்வா டைடே, லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா(விக்கெட் கீப்பர்), சாம் குர்ரான், ஷாருக் கான், ஹர்ப்ரீத் ப்ரார், ராகுல் சாஹர், ககிசோ ரபாடா, நாதன் எல்லிஸ், அர்ஷ்தீப் சிங்

டெல்லி கேப்பிடல்ஸ் இம்பாக்ட் ப்ளேயர்கள்:

முகேஷ் குமார், அபிஷேக் போரல், ரிபால் படேல், பிரவீன் துபே, சர்பராஸ் கான்

பஞ்சாப் கிங்ஸ் இம்பேக்ட்:

பிரப்சிம்ரன் சிங், சிக்கந்தர் ராசா, மேத்யூ ஷார்ட், ரிஷி தவான், மோஹித் ரதி

 

Continues below advertisement
Sponsored Links by Taboola