ஐ.பி.எல். தொடரின் 41-வது ஆட்டத்தில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் நேருக்குநேர் மோத உள்ளன. 6 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளதால் அந்த அணிக்கு இந்தா போட்டி வாழ்வா? சாவா? போட்டி ஆகும். அதேபோல, புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ள பஞ்சாப் அணியும் நேருக்கு நேர் மோத உள்ளனர்.




ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் இதுவரை 27 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில், மும்பை அணி 14 முறையும், பஞ்சாப் அணி 13 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். இரு அணிகளும் இன்று மோத உள்ள அபுதாபியில் உள்ள ஷேக் சையத் மைதானத்தில் இரு அணிகளும் இதற்கு முன்பு ஒரு முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அந்த போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது.


அதிக ரன்கள் யார்? : 


இரு அணிகளும் மோதிய கடைசி 5 போட்டியில் மும்பை அணி 2 போட்டியிலும், பஞ்சாப் அணி 3 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடரின் முதல் பாதியில் நடைபெற்ற மோதலில் மும்பை அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி வீழ்த்தியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே மோதலில் பஞ்சாப் அணி 7 முறை முதலில் பேட்டிங் செய்தும், மும்பை அணி 7 முறை முதலில் பேட்டிங் செய்தும் வெற்றி பெற்றுள்ளன. மும்பை அணி 7 முறை இரண்டாவது பேட்டிங் செய்தும், பஞ்சாப் அணி 8 முறை இரண்டாவது பேட்டிங் செய்தும் வெற்றி பெற்றுள்ளன.




ஒரு போட்டியில் அதிகபட்சமாக மும்பை அணி சார்பில் பஞ்சாபிற்கு எதிராக லென்டில் சிம்மன்ஸ் 100 ரன்களை ஆட்டமிழக்காமல் குவித்துள்ளார். பஞ்சாப் அணிக்காக மும்பை அணிக்கு எதிராக ஹசிம் ஆம்லா 104 ரன்களை ஆட்டமிழக்காமல் குவித்துள்ளார். மும்பை அணி சார்பில் பஞ்சாப் அணிக்கு எதிராக அதிகபட்சமாக பொல்லார்ட் 514 ரன்களை குவித்துள்ளார். மும்பை அணிக்கு எதிராக மட்டும் பஞ்சாப் அணி சார்பில் அதிகபட்சமாக ஷான் மார்ஷ் 526 ரன்களை குவித்துள்ளார்.


அதிக விக்கெட்டுகள் யார்?:


மும்பை அணி சார்பில் பஞ்சாப் அணிக்கு எதிராக லசித் மலிங்கா 22 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மும்பை அணிக்கு எதிராக பஞ்சாப் அணி சார்பில் பியூஷ் சாவ்லா 15 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மும்பை அணி சார்பில் பஞ்சாப் அணிக்கு எதிராக முனாப் படேல் 21 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறந்த பந்துவீச்சை பதிவுசெய்துள்ளார். அதேபோல, பஞ்சாப் அணி சார்பில் மும்பை அணிக்கு எதிராக மார்கஸ் ஸ்டோய்னிஸ் 15 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.




பஞ்சாப் அணி மும்பைக்கு எதிராக தனது அதிகபட்ச ரன்னாக 223 ரன்களை எடுத்துள்ளது. மும்பை அணி பஞ்சாபிற்கு எதிராக தனது அதிகபட்ச ரன்னாக 230 ரன்களை பதிவு செய்துள்ளது. மும்பை அணி குறைந்தபட்சமாக பஞ்சாபிற்கு எதிராக 87 ரன்களுக்கு சுருண்டுள்ளது. பஞ்சாப் அணி மும்பையின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 119 ரன்களுக்கு ஆட்டமிழந்தது அவர்களின் குறைந்தபட்ச ரன்கள் ஆகும்.