மும்பையில் நடைபெற்று வரும் 15வது ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. ஐ.பி.எல். தொடரில் சென்னை-மும்பை அணிகள் மோதும் ஆட்டம் என்றால் எப்போதும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.


இந்நிலையில், இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. பேட்டிங் களமிறங்கிய மும்பை அணிக்கு, ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன் ஓப்பனிங் இறங்கினர். முதல் ஓவரை முகேஷ் வீசினார். இந்த ஓவரின் இரண்டாவது பந்திலேயே மிட்-ஆனில் சாண்ட்னரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவரை அடுத்து, இஷான் கிஷனும் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி வெளியேறினார். 2-2 என்ற நிலையில் தடுமாறிய மும்பை அணிக்கு சூர்யகுமார் யாதவ் - பிரெவிஸ் ரன் சேர்ப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டது. 






போட்டியின் மூன்றாவது ஓவரின்போது, பிரெவிஸ் கேட்சை ஜடேஜா மிஸ் செய்தார். இது சென்னை அணிக்கு உறுத்தலாக இருக்கும் என்றிருந்த நிலையில், அடுத்த ஓவரிலேயே பிரெவிஸ் மீண்டும் கேட்ச் கொடுத்து வெளியேறி இருக்கிறார். இதனால், பவர்ப்ளே முடிவதற்குள்ளாகவே மூன்று விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி தடுமாறி வருகிறது. சிறப்பாக பந்துவீசிய முகேஷ், 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். ஆனால், ஃபீட்ல்டிங்கில் சொதப்பி வரும் சிஎஸ்கே அணி வீரர்கள், விக்கெட் எடுப்பதற்கான வாய்ப்புகளையும், ரன்களை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் மிஸ் செய்து வருகின்றனர்.


நம்பர்ஸ் சொல்வது என்ன?


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில், மும்பை அணியின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 19 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இரு அணிகளும் இதற்கு முன்பு ஒரு முறை மட்டுமே மோதியுள்ளன. அதில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது.


இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 போட்டிகளில் 3ல் மும்பை இந்தியன்ஸ் அணியும், 2ல் சென்னை அணியும் வெற்றி பெற்றுள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணி 10 முறை முதலில் பேட் செய்தும், சென்னை அணி 7 முறையும் முதலில் பேட் செய்து வெற்றி பெற்றுள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணி 9 முறை இரண்டாவது பேட் செய்தும், சென்னை அணி 6 முறை இரண்டாவது பேட் செய்தும் வெற்றி பெற்றுள்ளன.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண