நடப்பு தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏலம் மூலம் பல்வேறு புதிய வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். சென்னை அணிக்காக அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆல் ரவுண்டர் தீபக்சாஹர் காயம் காரணமாக ஒரு போட்டியில் கூட ஆடாத நிலையில் இந்த தொடரில் இருந்து விலகினார்.

சென்னை அணியும் சொதப்பலான பந்துவீச்சால் தொடர்ந்து 6 போட்டிகளில் ஆடி 5 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இந்த நிலையில், சென்னை அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக வேகப்பந்துவீச்சாளர் ஆடம் மிலினே விலகியுள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய முதல் போட்டியில் ஆடம் மிலினேவிற்கு தொடையில் காயம் ஏற்பட்டது. பின்னர், காயத்தின் வீரியம் காரணமாக அவர் அடுத்தடுத்த போட்டிகளில் ஆடவில்லை.

இந்த நிலையில், அவரது காயத்தின் தீவிரத்தன்மை காரணமாக அவர் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதையடுத்து, அவருக்கு பதிலாக மதீஷா பதிரானா அணியில் எடுக்கப்பட்டுள்ளார். 19 வயதான பதீரானா இலங்கையைச் சேர்ந்தவர். மிதவேகப்பந்துவீச்சாளரான பதீரானா இலங்கை அணிக்காக 19 வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பை அணியில் விளையாடிய அனுபவம் உள்ளனர். சென்னை அணிக்காக அவர் 20 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயத்தில் சென்னை அணியின் ஆல்ரவுண்டர் தீபக் சாஹருக்கு பதிலாக மாற்று வீரரை சென்னை அணி இன்னும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆடம் மிலினே நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். வேகப்பந்துவீச்சாளரான அவர் 40 ஒருநாள் போட்டிகளில் 41 விக்கெட்டுகளையும், 31 டி20 போட்டிகளில் 32 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 10 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

சென்னை அணி மிகவும் நெருக்கடியான சூழலில் உள்ள நிலையில், அடுத்தடுத்த முக்கிய வீரர்கள் காயம் காரணமாக ஆடாமல் விலகுவது சென்னை ரசிகர்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண