ஹர்திக் பாண்டியா தனது பழைய ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸுக்கு, அவரது தற்போதைய அணியான குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து மாற்றப்படவுள்ளதாக ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகமும் பரபரப்பாக பேசி வருகின்றது.  வரும் டிசம்பர் 19 ஆம் தேதி துபாயில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்னதாக நடக்கவுள்ள மிகப்பெரிய பரிமாற்றம் என்று கிரிக்கெட் வீரர்களின்  வர்த்தக ஒப்பந்தம் குறித்து பல எதிர்வினைகள் வந்துள்ளன. 


ஐபிஎல் லீக்கில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வினும் இந்த ஒப்பந்தம் உண்மையாக இருந்தால், மும்பை அணி ஹர்திக்கை சேர்ப்பதன் மூலம் மும்பை அணி தங்கம் வென்றுவிட்டதாக கூறியுள்ளார்.


மேலும் அவர், “அது மட்டும் உண்மையாக இருந்தால் மும்பை மிகவும் பலமான அணியாக உருப்பெறும். ஐபிஎல் லீக்கில் ஏலம் மற்றும் வீரர்களை வாங்குவது என்பது முழுக்க முழுக்க ஒரு முழுமையான பண ஒப்பந்தம். மும்பை விடுப்பதற்கு எந்த வீரரும் இல்லை, மும்பை இந்தியன்ஸ் ஒருபோதும் வர்த்தகத்தில் வீரர்களை விடுவித்தில்லை. இதற்கு முன்னரும் மும்பை அணி வீரர்களை விடுவித்ததில்லை. ஒருவேளை மும்பை அணிக்கு  ஹர்திக் திரும்பி வந்தால் அவர்களின் ப்ளேயிங் லெவன் மிகவும் பலமானதாக இருக்கும்” என்றும் அஷ்வின் தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் பதிவேற்றிய வீடியோவில் கூறியுள்ளார்.


மேலும் அவர், ஐபிஎல் வரலாற்றிலேயே கேப்டன்கள் மூன்று முறை மட்டுமே மாற்றப்பட்டுள்ளனர் (Trade) செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். முதலாவது அஷ்வின், பஞ்சாப் கிங்ஸிலிருந்து டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு மாற்றப்பட்டார்.  இரண்டாவது ராஜஸ்தான் ராயல்ஸிலிருந்து டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு அஜங்கியா ரஹானே மாற்றப்பட்டார். அந்த வரிசையில் மூன்றாவது கேப்டனாக ஹர்திக் பாண்டியா மாற்றப்படுவார்.  ஐபிஎல் மி ஏலத்தில் எங்களுக்கும் (எனக்கும் அஜங்கியா ரஹானேவுக்கும்) ஹர்திக்கும் இடையே உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், ஹர்திக் பாண்டியா ஐபிஎல் வென்ற கேப்டன்.  ஹர்திக் பாண்டியா வெளியேற்றப்பட்டால் அது  குஜராத் டைட்டன்ஸ் அணியின் சமநிலையை முற்றிலுமாக மாற்றுகிறது. மும்பை இப்போது செய்ய வேண்டியது என்னவென்றால், ஹர்திக் பாண்டியா 15 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர். இவரை வாங்கவேண்டும் என்றால் மும்பை அணி தன்னிடம் இருக்கும் வீரர்களை விடுவிக்க வேண்டும் ”என்று அஷ்வின் கூறினார்.






ஹர்திக்கை தங்கள் அணியில் இடம்பிடிக்க MI வீரர்களை விடுவிக்க வேண்டும்


கடந்த ஏலத்தின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 லட்சம் ரூபாய் மட்டுமே மீதம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. வரவிருக்கும் மினி ஏலத்தில் அவர்கள் மேலும் 5 கோடி ரூபாயை தங்களது கணக்கில் ஐபிஎல் விதிமுறைகளின் படி வரவு வைக்கப்படும்.  இது மும்பை அணியின்  மொத்த கணக்கில் 5.05 கோடி ரூபாயாக உயர்த்தும். எனவே, ஹர்திக்கிற்கு இடமளிக்க, அவர்கள் குறைந்தது 9.95 கோடி ரூபாய் மதிப்புள்ள வீரர்களை விடுவிக்க வேண்டும்.  இதில் இவர்களின்  முதல் டார்கெட்டாக 2022 ஏலத்தில் 8 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சராகத்தான் இருக்கும் எனவும் கூறப்படுகின்றது.