மும்பை இந்தியன்ஸ் அணி பேட்ஸ்மேன்கள் பயிற்சி மேற்கொண்டபோது தாமதமாக வந்ததற்தாக இளம் வீரர் நேஹால் வதேராவை அந்த அணி நிர்வாகம் வித்தியாசமான தண்டனை ஒன்றை கொடுத்துள்ளது. ஆனால் அவருக்கு பணம் அபராதம் விதிக்கப்படவில்லை. 


அதற்கு பதிலாக மும்பை விமான நிலையத்தில் இருந்து லக்னோ விமான நிலையம் வரை நேஹால் வதேரா காலில் பேடுடன் (கால் பட்டைகள்) இருக்கும்படியான தண்டனையை கொடுத்தது. இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட மும்பை இந்தியன்ஸ், “வதேரா விமான நிலையத்தில் பேடுடன் இருப்பதை காணலாம். இது அணியின் கூடத்திற்கு தாமதமாக வந்ததற்கான தண்டனை” என குறிப்பிட்டு இருந்தது. 






முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணியில் தாமதமாக வருபவர்களுக்கு ஜம்ப்சூட் அணிவதே தண்டனையாக இருந்தது. 






லூதியானாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் நேஹால் வதேரா  ஐபிஎல் 2023 மினி ஏலத்தில் மும்பை இந்தியன்ஸால் 20 லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்டார். நேஹால் வதேரா தனது முதல் ஐபிஎல் சீசனில் நல்ல பார்மில் இருந்து வருகிறார். இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 198 ரன்கள் எடுத்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராகவும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராகவும் அடுத்தடுத்து அரைசதங்கள் அடித்து அசத்தினார். 


வதேரா ரஞ்சி டிராபியிலும் இந்தாண்டு அறிமுகமாகி ஜனவரியில் குஜராத்திற்கு எதிராக அற்புதமாக விளையாடி 123 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து நடப்பு சாம்பியனான மத்தியப் பிரதேசத்திற்கு எதிராக 214 ரன்கள் எடுத்தார். அறிமுகமான முதல் ரஞ்சி சீசனிலேயே வதேரா 2 சதங்கள் உள்பட 376 ரன்கள் குவித்தார். மும்பை தற்போது புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.