மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெய்ல், ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி புதிய அணிக்கு கேப்டனாக வருகிறேன் என்று கூறும் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 


ஐபிஎல் 2023


41 வயதான இந்திய அணியின் முன்னாள் வெற்றிகரமான கேப்டன் தற்போது இந்தியன் பிரீமியர் லீக் 2023 சீசனுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 13வது முறையாக தலைமை தாங்க தயாராகி வருகிறார். சென்னை அணி, போட்டியின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை மார்ச் 31ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது. 



கெயில் வெளியிட்ட வீடியோ


தோனிக்கு இதுவே கடைசி ஐபிஎல் சீசன் என்று யூகங்கள் உள்ள நிலையில் இம்முறை கண்டிப்பாக தோனி கோப்பையை வென்று தந்துவிட்டுதான் போவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், முன்னாள் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் தனது ட்விட்டர் பக்கத்தில் MS தோனியை டேக் செய்து, ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த விடியோவில் எம்எஸ் தோனி தோன்றி, "புதிய அணியை கேப்டன் செய்ய வருகிறேன்" என்று இந்தியில் கூறுகிறார்.


தொடர்புடைய செய்திகள்: UPI Transaction : வருகிறது ஆப்பு: திணறவைக்கும் டிஜிட்டல் இந்தியா: ஏப்ரல் 1 முதல் பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்...


புதிய அணியில் தோனி?


இதனை வெளியிட்ட கெயில், அதோடு "ஹேய், எம்எஸ் தோனி, விசில் போடாத ஒரு புதிய அணியின் கேப்டனாகப் போகிறீர்கள் என்று கேள்விப்பட்டேன்", என்று எழுதியுள்ளார். இந்த சீசனின் முடிவில் தோனி ஓய்வு பெறுவதாக அறிவித்தால், சிஎஸ்கே நிர்வாகம் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸை உடனடியாக மாற்றியமைக்க வாய்ப்புள்ளது. ஜடேஜாவுடன் நல்ல உறவை அணி நிர்வாகம் பேணாத நிலையில் இது நடக்கவே வாய்ப்பு அதிகம்.






எழுச்சி பெறுமா சிஎஸ்கே?


கடந்த வருட ஐபிஎல் தோனி தலைமையிலான சென்னை அணிக்கு மோசமாக இருந்தது, ஏனெனில் 10 அணிகள் கொண்ட போட்டியில் சிஎஸ்கே ஒன்பதாவது இடத்தைதான் பிடித்தது. கடந்த ஆண்டு லீக் சுற்றில் சிஎஸ்கே நான்கு போட்டிகளில் வெற்றியும், 10ல் தோல்வியும் அடைந்தது. சென்னை அணி கடைசியாக 2021ல் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த சீசனில் சென்னை மீண்டும் எழுச்சி பெற்று, நல்ல நிலையில் தொடரை முடிக்க ஆயத்தமாக உள்ளது.